என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
    • பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    'என் இனிய தமிழ் மக்களே' என்ற அந்த மகா கலைஞனின் கம்பீர குரல் இன்று தனது ஒரே மகனான மனோஜ் மறைவு அவரை நொறுங்க செய்து விட்டது.

    மனோஜ் மறைவு குறித்து தகவல் அறிந்ததும் சேரன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு, நாஞ் சில் பிசி அன்பழகன் உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த மனோஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

    • தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
    • தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தினேன்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப்போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து (மொழிக்கொள்கை) அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

    * தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன்.

    * பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்.

    * தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கூறினார். 

    • கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கருப்பசாமி பாண்டியன் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.

    நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • அயப்பாக்கத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை.
    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 72 காவல் நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அப்போது உறுப்பினர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்திக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மே மாதம் பணிகள் தொடங்கும். ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய புதிய கட்டுமான பணி அடுத்தாண்டு பிப்ரவரியில் முடிக்கப்படும்.

    அயப்பாக்கத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை. அறந்தாங்கி காவல் நிலையத்தை 2-ஆக பிரித்து புதிய காவல்நிலையம் அமைப்பதற்கான அவசியம் இல்லை.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 72 காவல் நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

    ×