என் மலர்
நீங்கள் தேடியது "மேரேஜ் ஸ்டோரி"
- அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது அதோமுகம் திரைப்படம்.
- அதோமுகம் இயக்கிய சுனில் தேவ அவரது அடுத்த படமாக மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது அதோமுகம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பலரும் இப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டனர்.
இந்த படத்தின் மூலம், சித்தார்த் மற்றும் சைத்தன்யா நாயகன் நாயகியாக அறிமுகமானார்கள். பலரும் அதோமுகம் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அதோமுகம் இயக்கிய சுனில் தேவ அவரது அடுத்த படமாக மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை ரீல் பெட்டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அதோமுகம் நாயகன் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஷபானா மற்றும் தீபிகா வெங்கடாசலம் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை தமிழ் செல்வன், இசை சரண் ராகவன், படத்தொகுப்பு - தமிழ் அரசன் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ஸ்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.