என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கானா இளம்பெண்"
- கழிப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் தனது உறவினர் ஒருவருடன் அருகில் உள்ள மலைக்குச் சென்றார்.
- கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் ஊர் கொண்டாபேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றார்.
தரிசனம் முடிந்து மாலை கோவிலில் நடந்த பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு 11.30 மணி அளவில் கோவில் அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.
கழிப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் தனது உறவினர் ஒருவருடன் அருகில் உள்ள மலைக்குச் சென்றார்.
அப்போது கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மலையில் மது குடித்து கொண்டு இருந்த அவரது நண்பர்கள் 6 பேர் வந்து இளம்பெண்ணை மடக்கினர்.
இளம்பெண்ணின் உறவினரின் கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் அவர்கள் 7 பேரும் சேர்ந்து மது அருந்தியபடி விடிய விடிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் தப்பிச் சென்றனர்.
அதிகாலை இளம்பெண் மற்றும் உறவினர் தப்பி வந்து மெஹபூபா நகர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.