என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மூதாட்டி"

    • மூதாட்டியை பார்க்க சென்ற அவரது மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • மூதாட்டி உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அந்த பகுதியை சேர்ந்த நாகராஜன் என்ற வாலிபர் மது போதையில் மூதாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் மேல் பாய்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனை சற்றும் எதிர்பாராத மூதாட்டி நாகராஜின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். அப்போது போதை ஆசாமி நாகராஜ் மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மூதாட்டிக்கு முகம், கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாலும் மூதாட்டிக்கு உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து போதை ஆசாமி நாகராஜன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலையில் மூதாட்டியை பார்க்க சென்ற அவரது மகன் தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தாயை மீட்டு அவர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மூதாட்டிக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜாம்பஜார் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.

    போதை வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் மூதாட்டி உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார். இது தொடர்பாகவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ×