என் மலர்
நீங்கள் தேடியது "ஷேக் ரஷீத்"
- லக்னோ அணிக்கு எதிராக ரஷீத் 19 பந்தில் 27 ரன்கள் குவித்தார்.
- ஒரு தவறான ஷாட்டால் அவுட்டாகிவிட்டேன்.
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை- லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இளம் வீரர் ஷேக் ரஷீத் அறிமுகமானார். இவர் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 19 பந்தில் 27 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும்.
இந்நிலையில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்த வேண்டும் என்றே நினைத்தேன். ஒரு தவறான ஷாட்டால் அவுட்டாகிவிட்டேன். அடுத்தமுறை நிச்சயம் தவறை திருத்திக்கொள்வேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
என ரஷீத் கூறினார்.