என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பேட்மிண்டன் அணி"

    • சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • இதில் நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

    புதுடெல்லி:

    சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் வருகிற 27-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன் இந்தோனேசியா, 2 முறை 2-வது இடம் பிடித்த டென்மார்க், வலுவான இங்கிலாந்து ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். ஒவ்வொரு போட்டியிலும் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் ஆட்டம் நடைபெறும்.

    சுதிர்மான் கோப்பை போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக இரட்டையர் பிரிவு இணையான காயத்ரி கோபிசந்த், திரிஷா ஜாலி அணியில் இடம் பெறவில்லை. காயத்தில் இருந்து மீண்ட சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை அணிக்கு திரும்பி இருக்கிறது.

    இந்திய அணி வருமாறு:-

    லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் (ஆண்கள் ஒற்றையர்), பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாய் (பெண்கள் ஒற்றையர்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார் (ஆண்கள் இரட்டையர்), ஸ்ருதி மிஸ்ரா- பிரியா (பெண்கள் இரட்டையர்), தனிஷா கிரஸ்டோ- துருவ் கபிலா, ஆத்யா வரியாத்-சதீஷ் குமார் (கலப்பு இரட்டையர்).

    ×