என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஓபன் தடகள போட்டி"

    • இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
    • இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 14 வகையான பந்தயங்கள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழக வீராங்கனைகள் டாப்-3 இடங்களை வசப்படுத்தினர். நித்யா ராமராஜ் 13.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கே.நந்தினி (13.58 வினாடி) 2-வது இடத்தையும், ஸ்ரீரேஷ்மா (13.99 வினாடி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் 56.90 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை சொந்தமாக்கினார். கேரள வீராங்கனை அனு (57.52 வினாடி) 2-வது இடத்தையும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 01.27 வினாடி) 3-வது இடமும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கிருத்திகா 11.87 வினாடியில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கேரளாவின் ஆர்த்ரா (12.07 வினாடி) 2-வது இடமும், பீகாரின் ஷதாக்ஷி ராய் (12.15 வினாடி) 3-வது இடமும் கைப்பற்றினர்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஆந்திர வீரர் ஷேக் முகைதீன் (2.08 மீட்டர்) முதலிடமும், தமிழக வீரர் முகேஷ் அசோக்குமார் (2.05 மீட்டர்) 2-வது இடமும், கடற்படை வீரர் பாரதி விஸ்வநாதன் (2.05 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர். நீளம் தாண்டுதலில் உத்தரபிரதேசத்தின் ஆதித்யா குமார் சிங் (7.74 மீட்டர்) தங்கப்பதக்கத்தை வென்றார். ரெயில்வே வீரர் சுவாமி நாதன் (7.64 மீட்டர்) 2-வது இடமும், தமிழகத்தின் ஷரோன் ஜெஸ்டஸ் (7.54 மீட்டர்) 3-வது இடமும் பிடித்தனர். டிரிபிள் ஜம்பில் தமிழகத்தின் கெய்லி வெனிஸ்டர் 15.64 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    ×