என் மலர்
நீங்கள் தேடியது "slug 94316"
- தீபாவளி திருநாள் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோலிவுட் நட்சத்திரங்களும் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினர்.

பேரக்குழந்தைகளுடன் ரஜினிகாந்த்
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடினார். தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இடுகிறார். அவர்களின் பின்னால் வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்றுகொண்டு பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதர்வா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்நிலையில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக அதர்வா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- 2008-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்க சொன்னார்.
- தான் பிறந்த நாச்சிக்குப்பத்தில் தாய்-தந்தைக்கு நினைவு மண்டபம் கட்ட ரஜினி திட்டமிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி வந்ததில்லை. ரஜினி 2008ம் ஆண்டில் ரசிகர்களை சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில் கவனிக்க வைத்த விஷயம் கடமையைச்செய் பலனை எதிர்பார் என்ற வாசகம்.

அதோடு ரசிகர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என்று ரஜினி உத்தர விட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் நீங்கள் பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் உங்கள் தாய் தந்தையர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா? என்று வாசிக்கப்பட்டது. அப்போது ரஜினியின் முகத்தில் ஏற்பட்ட பிரகாச ஓளி அவரது மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அந்த ரசிகர் யார் என்று ரஜினி கேட்க, கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்று அந்த ரசிகர் எழுந்து நின்றார். அவர் மீது தனி பாசம் கொண்ட ரஜினி தன்னை வீட்டில் வந்து பார்க்கும்படி கூறினார். மறுநாள் வீட்டில் சந்தித்தவரிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஊர் நிலவரம், நாச்சிக் குப்பத்தின் தற்போதைய சூழல் எல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டவர் கார்த்திகேயனுக்கு கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்து அழகு பார்த்தார்.

கார்த்திகேயன் கேள்வி எழுப்பிய பிறகு நாச்சிக் குப்பத்தின் மீது ரஜினியின் பார்வை விழுந்தது. அங்கு தன்னுடைய அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ் பிறந்த வீட்டின் தற்போதைய சூழல் எல்லா வற்றையும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டே இருந்திருக்கிறார். தனது அண்ணன் சத்யநாராயணாவை நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு அனுப்பி பார்க்க வைத்தார் ரஜினி. அங்கு ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் பூர்வீக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.

அந்த வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ரஜினிக்கு சொந்தமான ஒரு தோட்டம் போன்ற இடம் அமைந்திருக்கிறது. அங்கு முதல் கட்டமாக வேலி அமைத்து ஒரு தண்ணீர் தொட்டியை அமைக்க உத்தரவிட்டார். வயல், விவசாயம் வேலைகளை மட்டுமே நம்பி இருக்கும் அந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை போக்க தண்ணீர் தொட்டியும் அங்கேயே கால்நடைகள் தண்ணீர் அருந்தும்படியான வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த வசதியால் அந்தப் பகுதியில் இருந்தவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகியிருக்கிறது. தான் பிறந்த கிராமத்தை நினைவுபடுத்திய கிருஷ்ணகிரி கார்த்திகேயனிடமே இடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்தார் ரஜினி. இது நடந்து பல ஆண்டுகள் ஆகின. பிறகு சில வாரங்களுக்கு முன்பு தாய் தந்தையர்க்கு சிலை அமைக்கும் பணிக்காக இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடந்தன.

தோட்டத்துப் பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஓடு வேய்ந்த சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டது. இதன் மீது ஒரு பீடம் கட்டப்பட்டு அதில் பெற்றோரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு, அங்கு நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடக்க இருப்பதாகக் கூறுப்படுகிறது.
- ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
- தற்போது மக்களின் பணிக்காக மன்றத்தை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து விட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் இருந்த ரஜினி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற அரசியல் கட்சிகளில் இணைந்து விட்டனர். ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டும் தொடர்ந்து மன்றத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் வெளியாகும் போது மட்டும் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டும், நற்பணிகளை செய்தும் வருகிறார்கள். ஆனால் இந்த செயல்பாடுகள் தலைமை மன்றத்தின் ஆதரவோடு இல்லாமல் அவரவர்கள் அந்தப்பகுதிகளில் இருக்கும் ரசிகர்களோடு சேர்ந்து செய்து வருகிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு முழுக்கு முடிவை அறிவித்தபோது ரசிகர்களின் நற்பணி மன்றம் தொடர்ந்து செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு மிகப்பெரிய நற்பணிகள் ரசிகர்களால் செயல்படுத்தப்படவில்லை. சிலர் பிற கட்சிகளில் இணைந்து பெரிய பொறுப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். இதன்படி கிருஷ்ணகிரி ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த மதியழகன் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இவரது செயல் பாடுகளில் நம்பிக்கை வைத்த தி.மு.க. தலைமை பர்கூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. இதை பயன்படுத்தி எம்.எல்.ஏ.-வாக மதியழகன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பும் கூடுதலாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமே மன்றத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. ரஜினி மன்றத்தின் தலைமையின் அனுமதியோடு நற்பணிகளை செய்ய வேண்டும் அதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் இந்த மக்கள் பணிக்கு ரஜினி அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர்
இதையடுத்து, 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஜெயிலர்
இந்த பகுதியில் பொது மக்கள் யாரும் அனுமதியில்லை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும், இதில் நடிகர் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ரஜினி
இந்நிலையில், படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் சென்றபோது, புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பை அளித்தனர். இதையடுத்து தனது காரின் கண்ணாடியை கீழிறக்கி ரசிகர்களை பார்த்து ரஜினி கையசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
- இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினி சென்றுள்ளார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

ஜவான்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்து உரையாடியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார்.

ஷாருக்கான்
மேலும் அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார். ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த அனுபவப் பதிவை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Wot a 30 days blast RCE team! Thalaivar blessed our sets…saw movie with Nayanthara partied with @anirudhofficial deep discussions with @VijaySethuOffl & Thalapathy @actorvijay fed me delicious food.Thx @Atlee_dir & Priya for ur hospitality now need to learn Chicken 65 recipe!
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2022
- நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் அதன்பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1௦௦ கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் - கார்த்தி
இப்படத்திற்கும் படத்தில் நடித்தவர்கள் பலருக்கும் திரைதுறையினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை தொலைப்பேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.

ரஜினி - கமல்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பாராட்டியுள்ளனர். இதனை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணிகளை பார்த்து நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் - கார்த்தி
மேலும் "கமல் சார், நீங்கள் எப்பொழுதும் சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய, உயர்ந்த தரத்தை அமைக்க எங்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை இது போன்ற தருணங்களில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். மிகுந்த அன்பும் மரியாதையுடன் கார்த்தி" என குறிப்பிட்டுள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
- பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய ரஜினி, கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வன்
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் 'பொன்னியின் செல்வன்' படத்தை பார்த்து விட்டு கார்த்திக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்ரம் - கமல்ஹாசன் - கார்த்தி
இது குறித்து கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சினிமாவில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க எங்களை எப்போதும் ஊக்குவித்து வருகிறீர்கள் கமல் சார். அன்பையும் மரியாதையையும் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி
மேலும், "ரஜினி சார் உங்கள் அழைப்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பிறர் உழைப்பை அங்கீகரித்து அவர்களை மனதார பாராட்டும் உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது" என்று கூறியுள்ளார்.
Thank you @ikamalhaasan sir, @rajinikanth sir 🙏 pic.twitter.com/moHVnXdQQn
— His Highness Vanthiyathevan (@Karthi_Offl) October 6, 2022
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர்.
- இதன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஜெயிலர்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படப்பிடிப்பு தளம்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர்.
- இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
முன்னணி கதாநாயகர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடிக்கும்போது அதை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தும், வீடியோவில் பதிவு செய்தும் இணையதளத்தில் கசியவிடுவது தொடர்ந்து நடக்கிறது. வாரிசு படப்பிடிப்பில் விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இதனால் படப்பிடிப்பை பாதுகாப்போடு நடத்துகிறார்கள்.

ஜெயிலர்
இந்நிலையில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு வீடியோவும் இணையத்தில் கசிந்துள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பை சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கினர். பின்னர் எண்ணூரில் நடத்தினர். அப்போது ரஜினிகாந்த் நடித்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புதியதாக ஒரு வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

ஜெயிலர்
அதில் ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் காட்சி. கோட் சூட் அணிந்து சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சி போன்றவை இடம் பெற்று உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் படக்காட்சி கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்காதது ஏன்? என்பதற்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருகிற 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னை தரமணியில் 'பொன்னியின் செல்வன்' பட இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

மணிரத்னம்
அப்போது இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, பழங்காலத்தில் எடுக்கப்பட்ட சரித்திர படங்களின் ஆடைபோல் இல்லாமல் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. தூய தமிழ் வசனங்கள் தான், ஆனால் சரளமாக பேச முடியும். நடிகர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வகையில் இருக்கும். வசனம் தூய தமிழில்தான் எழுதப்பட்டது. இந்த படத்தில் நாவலுக்கு ஏற்ற வகையிலும், என் பாணியும் கலந்து இருக்கும். புத்தகத்தை படித்த பாதிப்பில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும். 5 பாக புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்து உள்ளோம்.

மணிரத்னம்
ரஜினியை நடிக்க வைக்காதது ஏன்? என்ற கேளிவிக்கு இயக்குனர் மணிரத்னம் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் கேட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தால் கதையை மாற்ற வேண்டிய நிலை வரும். இது சரியாக இருக்காது என்றார்.

மணிரத்னம்
மேலும் அவர் பேசியது, சூட்டிங்கின்போது எல்லோரும் என்னை பாடாய் படுத்தினார்கள். நானும் எல்லோரையும் பாடாய் படுத்தினேன். வசனங்களில் ஜெயமோகன் சிறப்பாக செய்து உள்ளார். கொரோனா காலத்தில் நடிகர்கள் குண்டாகி விடுவார்களோ? என்று தான் பயந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.