search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை திடீரென உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. தற்போதைய  விலை உயர்வை தொடர்ந்தும் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கட்டணங்களை விட குறைவாகவே இருக்கிறது. 

    புதிய விலை உயர்வை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை துவக்க விலை ரூ. 91 ஆக மாறி இருக்கிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் சலுகை விலை 21.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகை விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

     ஜியோ சலுகை விலை

    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 155 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன சலுகை விலை ரூ. 179 என துவங்குகிறது. இந்த பிரீபெயிட் சலுகைகள் சந்தையில் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது. புதிய விலை டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு விற்பனை மையத்திற்கு ஏற்ப வேறுபடும். மஹிந்திரா தார், பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்.யு.வி.700 மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

     மஹிந்திரா கார்

    கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. மாடலுக்கு ரூ. 61,055, மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு ரூ. 32,320, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 81,500, எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 49 ஆயிரம், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 40,200, பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது.


    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 500 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். 

    தற்போது இதன் தினசரி டேட்டா அளவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இதே விலை கொண்ட சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சற்றே கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. 

     ஏர்டெல்

    கூடுதல் டேட்டாவினை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதே சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் டிரையல் ஒரு மாதத்திற்கும், ஷா அகாடமி சந்தா ஒரு வருடத்திற்கும், இலவச ஹலோ டியூன் சந்தா, வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தி கிரேட் ஹோண்டா பெஸ்ட் எனும் பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 38,600 மதிப்பிலான சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகள் ஹோண்டா அமேஸ், ஜாஸ், புதிய சிட்டி, 4-ம் தலைமுறை சிட்டி மற்றும் டபிள்யூ.ஆர்.வி. போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என ஹோண்டா அறிவித்து இருக்கிறது. 

     ஹோண்டா சலுகை

    சிறப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சலுகைகள்- தள்ளுபடி, லாயல்டி போனஸ், எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 36,147 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி. மாடலுக்கு ரூ. 29,058 வரையிலான சலுகைகளும், 4-ம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 38,608 வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.



    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 விலை சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் 400 எம்.பி. கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூன்று சலுகைகளிலும் பயனர்களுக்கு முறையே 1.4 ஜி.பி., 1.9 ஜி.பி. மற்றும் 2.4 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரூ.129 மற்றும் ரூ.249 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகளுடன் ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டது. ஏர்டெல் ரூ.499 சலுகையில் முன்னதாக தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது. தற்சமயம் 400 எம்.பி. கூடுதல் டேட்டா தவிர ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய 4ஜி சாதனம் வாங்குவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இச்சலுகை கிடைக்கும். இதுதவிர நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    ஏர்டெல் ரூ.448 சலுகையில் முன்னதாக 1.5 ஜி.பி.க்கு பதில் தினமும் 1.9 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இச்சலுகையும் 82 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதிலும் நார்டான் மொபைல் செக்யூரிட்டி சந்தா, விண்க் மியூசிக் சந்தா மற்றும் கேஷ்பேக், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டாவுக்கு பதில் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இச்சலுகையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் இதுவரை ஏர்டெல் வலைதளத்தில் மாற்றப்படவில்லை.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் வருடம் முழுக்க தினசரி டேட்டா, அன்லமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் சலுகை வழங்கப்படுகிறது.



    ஐடியா செல்லுலார் நிறுவனம் சிட்டிபேங்க் உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுக்க டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கியது. தற்சமயம் இந்த சலுகை வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    வோடபோன் சிட்டிபேங்க் சலுகை ஏற்கனவே ஐடியா செல்லுலார் பயனர்களுக்கு வழங்கப்பட்டதை போன்ற பலன்களை வழங்குகிறது. அதன்படி பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் அன்ல்மிட்டெட் வாய்ஸ் கால் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

    இந்த சலுகை ஜூலை 31, 2019 வரை வழங்கப்படுகிறது. இச்சலுகை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஆமதாபாத், செக்கந்தராபாத், பரோடா, ஜெய்பூர், டெல்லி, நொய்டா, குர்கிராம், மும்பை மற்றும் சண்டிகர் என தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.



    புதிய சலுகையை பெற பயனர்கள் ஏற்கனவே வோடபோன் பிரீபெயிட் சேவையை பயன்படுத்த வேண்டும். பின் வோடபோனின் சலுகைகள் இடம்பெற்றிருக்கும் வலைதளம் சென்று புதிதாக கிரெடிட் கார்டு ஒன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு வாங்கியதும், குறைந்தபட்சம் ரூ.4000 பயன்படுத்தினால் இந்த சலுகையை பெறலாம்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று கிரெடிட் வாங்கிய முதல் 30 நாட்களுக்குள் ரூ.4000 தொகைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த தொகையை ஒரே சமயமும் பயன்படுத்தலாம், சிறிது சிறிதாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.
    ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளை அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது. கடந்த வாரம் ரூ.299 விலையில் பிரீபெயிட் சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகையை ஏர்டெல் அறிவித்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.

    இதில் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏர்டெல் டி.வி. பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. இதில் ஜீ5, HOOQ, நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.



    வாடிக்கையாளர்கள் ரூ.249 சலுகையை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும்.

    இத்துடன் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.129 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் டி.வி. மற்றும் வின்க் மியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மலிவு விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #Airtel



    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதாந்திர சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.48 விலையில் கிடைக்கும் ஒரு சலுகையில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    ரூ.98 விலையில் கிடைக்கும் மற்றொரு சலுகையில் 6 ஜி.பி. டேட்டா மற்றும் 10 தேசிய எஸ்.எம்.எஸ். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ.ரூ.48 சலுகையில் 3 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியும் ரூ.98 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. 



    28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் கட்டணம் ரூ.175 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. புதிய சலுகை தினமும் குறைந்தளவு டேட்டா பயன்படுத்துவோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏர்டெல் ரூ.248 விலையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்தது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #GalaxyS10



    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்போன்களை ரூ.46,900 முதல் வாங்க முடியும். அந்த வகையில் பயனர்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.9,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 கேஷ்பேக் பெறலாம். அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.9000 வரை கேஷ்பேக் பெறலாம்.



    கேலக்ஸி எஸ்10 (128 ஜி.பி.) வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 கேஷ்பேக்கும், மற்ற கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.5000 வரை கேஷ்பேக் பெற முடியும். இதேபோன்று 512 ஜி.பி. மாடல் வாங்கும் போது ரூ.8,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. வேரியண்ட்களை வாங்கும் போது ரூ.9000 அப்கிரேடு போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இச்சலுகையின்றி கேல்கஸி எஸ்10 பிளஸ் 1000 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி எஸ்10 (512 ஜி.பி.) மாடல் ரூ.84,900 என்றும் 128 ஜி.பி. மாடல் விலை ரூ.66,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    வோடபோன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone



    வோடபோன் இந்தியா நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. ரூ.139 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய ரூ.139 விலை சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், தேசிய ரோமிங்கின் போது அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் கூடுதல் டேட்டாவினை எம்.பி. ஒன்றுக்கு 50 பைசா கட்டணத்தில் பயன்படுத்தலாம்.

    டேட்டா தீர்ந்ததும் அதிவேக டவுன்லோடுகளுக்கு கூடுதல் டேட்டாவினை கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம். இந்த சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் நிலையில், இது தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.



    இதே விலையில் வோடபோன் பல்வேறு இதர சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதேபோன்று 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ.129 மற்றும் ரூ.169 விலையில் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டாவும் ரூ.169 சலுகையில் 1 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் வோடபோன் ரூ.16 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா 24 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. ரூ.16 வோடபோன் சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படவில்லை.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,575 வரையிலான கேஷ்பேக் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    விலை உயர்ந்த முதல் மூன்று நிரந்தர மாதாந்திர ரீசார்ஜ்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாகவும், மற்ற விலை குறைந்த போஸ்ட்பெயிட் சலுகைகளை தேர்வு செய்வோர் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தும் போது 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    ஆறு மாத சலுகைகளுக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்குகிறது. எனினும் இதற்கான தொகை குறைவாகும். ரூ.1,525 விலையில் வருடாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஒருவர் தேர்வு செய்யும் போது ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். மாதம் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகை ரூ.18,300 முழுமையாக செலுத்தும் போது பயனர்களுக்கு ரூ.4,575 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரூ.1,125 மாதாந்திர சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தா தொகையை முழுமையாக செலுத்தும் போது ரூ.3,375 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தாவை முழுமையாக செலுத்தினாலும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    விலை குறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் பி.எஸ்.என்.எல். 20 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல். ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா மட்டுமின்றி ஆறு மாதங்களுக்கான தொகையை செலுத்துவோருக்கும் பி.எஸ்.என்.எல். கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கு ஆறு மாதங்களுக்கான தொகையை முழுமையாக செலுத்தும் போது 12 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் பயனர்களுக்கு ரூ.1,098 வரை கேஷ்பேக் கிடைக்கும். ரூ.1,125 மற்றும் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 12 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    பி.எஸ்.என்.எல். ரூ.725 மற்றும் ரூ.525 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு 8 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு நான்கு சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய கேஷ்பேக் சலுகை முதற்கட்டமாக கேரளா வாடிக்கையார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சலுகை மற்ற வட்டாரங்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 25 சவிகிதம் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது.
    வோடோபன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.999 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    எனினும், இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இதே போன்று நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட மற்ற சலுகைகளில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் நிலையில், வோடபோன் புதிய சலுகையில் மொத்தமே 12 ஜி.பி. டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய வோடபோன் சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.998 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இத்துடன் புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப் வட்டாரத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    ஏர்டெல் ரூ.998 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 12 ஜி.பி. டேட்டா, ஏர்டெல் டி.வி. சந்தா உள்ளிட்டவை 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    அதிகளவு டேட்டா விரும்புவோர் வோடபோன் வழங்கும் ரூ.1,699 சலுகையை தேர்வு செய்யலாம். ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ×