search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே-யை காட்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 12-வது சீசனில் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் தலா மூன்று முறை கோப்பைகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்பதே மில்லியன் கேள்விக்குறி?. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் காட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி சென்னைக்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வேண்டுமென்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    சென்னை அணி பந்து வீச்சில் அசத்தி வருகிறது. இது மாறுபட்ட ஆடுகளம். ஆகையால், மும்பை அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
    ஐதராபாத்தில் நாளை நடக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியை விழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கியது. ‘லீக்‘ ஆட்டங்கள் கடந்த 5-ந்தேதி முடிவடைந்தது. இதன் முடிவில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பிளேப் ஆப்’ சுற்று கடந்த 7-ந்தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் 8-ந்தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து வெளியேற்றியது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்று உள்ளன. இதனால் 4-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணி 8-வது முறையாகவும், மும்பை அணி 5-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தாலும் மும்பையிடம் 3 முறை தோல்வியை தழுவியது. இரண்டு ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் சரண்டர் ஆகி இருந்தது.

    இதற்கு நாளைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பழி தீர்த்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்த அனைத்து துறைகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) சிறப்பாக செயல்பட்டு கடுமையாக போராட வேண்டியது அவசியமாகும்.

    முதல் தகுதி சுற்றில் சென்னை அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதில் இருந்து மீண்டு 2-வது தகுதி சுற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    கேப்டன் பதவி மற்றும் பேட்டிங்கில் டோனி நல்ல நிலையில் உள்ளார். அவர் 14 ஆட்டத்தில் 414 ரன் எடுத்து உள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். ஸ்டிரைக்ரேட் 137.54 ஆகும். ரெய்னா 375 ரன்னும், டுபெலிசிஸ் 370 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.


    வாட்சன் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே. டெல்லி அணிக்கு எதிராக அவர் அதிரடியை வெளிப்படுத்தினார். வாட்சன் 2 அரை சதத்துடன் 318 ரன்னும், அம்பதி ராயுடு 281 ரன்னும் எடுத்து உள்ளனர்.

    சி.எஸ்.கேயின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் 24 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 16 விக்கெட்டும், ஜடேஜா 15 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

    வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் 19 விக்கெட் கைப்பற்றி நல்ல நிலையில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 2-வது வேகப்பந்து வீரரை (‌ஷர்துல்தாக்கூர்) சேர்த்ததில் எந்த பலனும் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் என்ற முறையில் முரளி விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து டோனி முடிவு செய்வார்.

    சென்னை அணியை 3 முறை வீழ்த்தி இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணி மீண்டும் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    மும்பை அணியில் வெற்றியை நிர்ணயம் செய்யக்கூடிய பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இது அந்த அணியின் பலமே.

    பேட்டிங்கில் குயின்டன் டி காக் (4 அரை சதத்துடன் 500 ரன்), சூர்யகுமார் யாதவ் (409), கேப்டன் ரோகித் சர்மா (390), இஷான்கி‌ஷன் ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15), ராகுல் சாஹர் (12), குணால் பாண்ட்யா (11) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட் முத்திரை பதிக்க கூடியவர்கள். ஹர்த்திக் பாண்ட்யா 386 ரன் குவித்துள்ளார். 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த வலுவான அணிகள் மோதுவதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    குவாலிபையர் 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8-வது முறையாக தகுதி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு தெரிவித்துள்ளர்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்னே எடுக்க முடிந்தது.

     ரிஷப் பந்த் அதிகப்பட்சமாக 25 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), காலின் முன்ரோ 24 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான்தாகீர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    148 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி கிடைத்தது.

    வாட்சன் 32 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), டுபெலிசிஸ் 39 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். போல்ட், இஷாந்த்சர்மா, அக்‌ஷர் படேல், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பந்து வீச்சாளர்களின் சிறப்பாக செயல்பட்டதாலும், தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும் சூப்பர் கிங்ஸ் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம், அவர்களால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம் என்று கேப்டன் டோனி பவுலர்களை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து பாராட்டும் சேரும். இந்த சீசனில் பந்து வீச்சு துறையால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பவுலர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டு டெல்லி அணியை மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க அனுமதிக்க வில்லை.


    டெல்லி அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எங்களது சுழற்பந்து வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து விட்டனர்.

    தொடக்க வீரர்கள் (வாட்சன், டுபெலிசிஸ்) சிறப்பாக ஆடினார்கள். அவர்களே ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். எந்த வகையிலும் இந்த வெற்றியை பெற்று இருந்தாலும் மகிழ்ச்சிதான். எங்கள் அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ‘குவாலிபையர்2’ போட்டி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுதான் எங்களது வழக்கமான வழியாகும். கடந்த முறை மட்டும் விதி விலக்கு.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

    முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    பவர்பிளேயில் 2 விக்கெட்டை இழந்தது ஏமாற்றம். அதில் இருந்து மீள்வதே கடினமாகி விட்டது. சென்னை அணி சுழற் பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். சிறந்த பார்ட்னர்ஷிப் அமைய வில்லை.

    ஒட்டு மொத்தத்தில் இந்த சீசனில் சிறப்பாக ஆடினோம். கேப்டன் பதவி வகித்தது பெருமை அளித்தது. சீனியர் வீரர்களான டோனி, வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
    விசாகப்பட்டினம்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக ஸ்லோ பிட்சாக இருந்ததால், சென்னை அணிக்கு கணிசமான ரன்களை இலக்காக வைக்க டெல்லி பேட்ஸ்மேன்கள் நினைத்தனர். இதற்காக துவக்கம் முதலே அதிரடி காட்டினர். ஆனால், அவர்கள் நினைத்ததைவிட பந்து மிகவும் மெதுவாக எழுந்து, பேட்ஸ்மேன்களை கணிக்க விடாமல் திணறச் செய்தது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் 21 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடியை 3-வது ஓவரில் பிரித்தார் சாஹர். அவரது துல்லிய பந்துவீச்சில் பிருத்வி ஷா எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அவர் 5 ரன்க்கள் மட்டுமே சேர்த்தார். ஷிகர் தவான் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள்  எடுத்தநிலையில், ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 37 ரன்கள்.

    பவர் பிளேவுக்கு பிறகு ரன் எடுக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அட்டகாசமான 4 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய முன்ரோ, 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும், அக்சார் பட்டேல் 3 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.

    களத்தில் இருந்த ரிஷப் பந்த், ரூதர்போர்டு இருவரும், எப்படியாவது கவுரவமான ஸ்கோரை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஹர்பஜன் ஓவரில் அபாரமாக சிக்சர் அடித்தார் ரூதர்போர்டு. அதன்பின்னர், ஆப் சைடில் வீசப்பட்ட லென்த் பாலை மீண்டும் சிக்சருக்கு அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 12 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.



    அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் தனது பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 116  ஆனது. அடுத்து களமிறங்கிய கீமோ பால், 3 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ பந்தில் கிளீன் போல்டானார். 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை தட்டிவிட்டு 6 ரன்கள் ஓடி எடுத்த ரிஷப் பந்த், 4வது பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிரென்ட் போல்ட், ஜடேஜா வீசிய கடைசி ஓவரில், 2வது பந்தில் தன் முழு பலத்தையும் காட்டி சிக்சர் அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் போல்டானார். பின்னர் வந்த இஷாந்த் சர்மா, 5வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்சரும் அடிக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் சேர்த்தது.

    சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர்,  சர்துல் தாகூர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் வாட்சனும் 50 ரன் இருக்கும்போது கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 109 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ரெய்னாவும், ராயுடுவும் ஜோடி சேர்ந்து ஆடினர். ரெய்னா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக வந்த டோனி 9 ரன்னில் வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100 வது வெற்றியை பதிவு செய்தது. 
    ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்வதற்கு இடையூறாக இருந்ததால், ரன்அவுட் ஆன அமித் மிஸ்ரா மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். #IPL2019 #DCvSRH
    ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி 162 ரன்களை சேஸிங் செய்தது. கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ரிஷப் பந்த் அவுட்டானதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார். மிஸ்ரா மற்றும் கீமோ பால் ஆகியோர் பேட்டிங் செய்தனர். 3 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில் மிஸ்ரா பந்தை சந்தித்தார். அப்போது பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் சகாவிடம் சென்றது. உடனே எதிர்முனையில் இருந்த கீமோ பால் ரன் எடுக்க ஓடினார். அப்போது சகா ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். பந்து படாமல் கலீல் அகமது கைக்கு வந்தது.

    அவர் பந்தை எடுத்து அமித் மிஸ்ராவை ரன்அவுட் ஆக்க Non-Striker ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். அப்போது ஆடுகளத்தை பாதித்தூரம் மட்டுமே தாண்டிய மிஸ்ரா, திடீரென சற்று வளைந்து ஸ்டம்பை மறைக்கும் வண்ணம் ஓடினார். இதனால் மிஸ்ரா காலில் பந்து பட்டு விலகிச் சென்றது. இதனால் மிஸ்ரா ரன்அவுட் ஆகவில்லை. அவர் வளைந்து ஓடாமல் இருந்திருந்தால் கலீல் அகமது வீசய பந்து ஸ்டம்பை தாக்கியிருக்கும்.



    இதனால் ரிவியூ கேட்டனர். ரிவியூ-வில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. பின்னர் ரன்அவுட்டுக்கு நடுவரிடம் முறையிட்டனர். இதனால் 3-வது நடுவர் உதவியை நாடினர். அவர் அந்த காட்சியை பலமுறை பார்த்து, மிஸ்ரா பீல்டிங் செய்தவற்கு இடையூறாக இருந்தார் என்ற ரன்அவுட் வழங்கினார்.

    இதனால் ஐபிஎல் வரலாற்றில் இந்த முறையில் அவுட்டான 2-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் 2013-ல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய யூசுப் பதான் புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக இந்த முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
    என்னுடைய முன்னுதாரணம், லிஜெண்ட், சகோதரர் எம்எஸ் டோனி என்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார். #MSDhoni #HardikPandya
    ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவாலிபையர்-1 நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டனர். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனியுடன் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தனர்.

    எம்எஸ் டோனியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘‘என்னுடைய முன்னுதாரணம், என்னுடைய சகோதரர், என்னுடைய நண்பர், என்னுடைய லிஜெண்ட் எம்எஸ் டோனி’’ என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

    எம்எஸ் டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொண்டு ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா.
    ஐபிஎல் 2019 சீசன் லீக் ஆட்டங்கள் அடிப்படையில் அனில் கும்ப்ளே தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். #IPL2019 #AnilKumble
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோதின. புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.

    லீக் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் விளையாட்டை ஆராய்ந்து அவர்களின் கனவு லெவன் அணியை வெளியிடுவார்கள்.

    அதன்படி இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவானும், முன்னாள் தலைமை பயிற்சியாளரும் ஆன அனில் கும்ப்ளே தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். இதில் விராட் கோலி, ஹிட்மேன் போன்றோருக்கு இடமில்லை.



    அனில் கும்ப்ளே கனவு அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:

    1. டேவிட் வார்னர், 2. கேஎல் ராகுல், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. எம்எஸ் டோனி 6. அந்ரே ரஸல், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஷ்ரேயாஸ் கோபால், 9. இம்ரான் தாஹிர், 10. ரபாடா, 11. பும்ரா
    ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றிபெற வேண்டி கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார். #Tirupati #RohitSharma #IPL2019
    திருமலை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 12-ந்தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் இன்று காலை திருப்பதி வந்தார்.

    காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று லட்டு பிரசாதம் வழங்கினர். 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர்.

    கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று காலை சுப்ரபாத தரிசன சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். #Tirupati #RohitSharma #IPL2019
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. IPL2019 #DCvSRH

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்தித்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவுக்கு நடுவர் ‘அவுட்’ வழங்கினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்து எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார்.




    மறுமுனையில் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடினார். அவர் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஒரு சிக்சரும், டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சரும் அடித்து கலக்கினார். 3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (8 ரன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

    அணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 56 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய மார்ட்டின் கப்தில் (36 ரன்கள், 19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து நிதானமாக ஆடிய மனிஷ் பாண்டே (30 ரன்கள், 36 பந்து, 3 பவுண்டரி) கீமோ பால் பந்து வீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

    இதனை அடுத்து விஜய் சங்கர், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். விஜய் சங்கர் ஆட்டத்தில் அதிரடி தென்பட்டது. 14.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் (28 ரன்கள், 27 பந்து, 2 பவுண்டரி) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். சற்று நேரத்தில் விஜய் சங்கரும் (25 ரன்கள், 11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் அக்‌ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

    கடைசி ஓவரில் முகமது நபி (20 ரன்), தீபக் ஹூடா (4 ரன்), ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


    பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். 7.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (17 ரன்) தீபக் ஹூடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (8 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனை அடுத்து ரிஷாப் பான்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலின் முன்ரோ (14 ரன்), அக்‌ஷர் பட்டேல் (0), ரூதர்போர்டு (9 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். ஆனால் மறுமுனையில் ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அணியின் ஸ்கோர் 18.5 ஓவர்களில் 158 ரன்னாக இருந்த போது ரிஷாப் பான்ட் (49 ரன்கள், 21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

    கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா(1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளி யேறியது. #IPL2019 #DCvSRH

    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மூன்று முறையும் கோப்பையை தட்டிச்சென்ற ரோகித் சர்மாவுக்கு, பழைய நிகழ்வு கைக்கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். #IPL2019 #RohitSharma
    ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் முதலிடம் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ 2-வது இடம் பிடித்தது. இரண்டு அணிகளும் நேற்று சென்னையில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் பலப்ரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.



    மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா தலைமையில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2013, 2105, 2017-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த மூன்று முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது.



    மேலும், 2015, 2017 மற்றும் 2019 என மூன்று வருடமும் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதன்படி பார்த்தால் (2019) இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்லும் என பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வருகிறது. இந்த ராசி ரோகித் சர்மாவுக்கு கைகொடுக்குமா? என்று ரசிர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    சொந்த மைதானத்தில் ஆடுகளத்தை இன்னும் சிறப்பாக மதிப்பிட்டிருக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி தெரிவித்தார். #IPL2019 #CSKvMI
    ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-1 சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    சேப்பாக்கத்தில் ஏழு லீக் ஆட்டங்களில் ஆறு முறை டாஸ் வென்ற அணிகள் பீல்டிங்கையே தேர்வு செய்தன. இதனால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பையின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் 131 ரன்களே சேர்த்தனர். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தத் தோல்விக்குப்பின் ஆடுகளத்தை இன்னும் சிறப்பாக கணித்திருக்க வேண்டும் என்று சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘சேப்பாக்கம் எங்களது சொந்த மைதானம். ஆடுகளம் கண்டிசனை உடனடியாக மதிப்பிட்டிருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே இங்கே 7 போட்டிகளில் விளையாடியுள்ளோம். இது சொந்த மைதான அணிக்கு கூடுதல் பலம்.



    ஆடுகளம் எப்படி செயலாற்றும் என்பதை நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஸ்லோ டிராக்கா இருக்குமா?, பந்து பேட்டிற்கு நன்றாக வருமா? வராதா? போன்ற விஷயங்களை நாங்கள் சிறப்பாக செய்யவில்லை. பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்’’ என்றார்.
    சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபையர்-1ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2019 #CSKvMI #Qualifier1
    ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.



    டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முரளி விஜய்க்கு, அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுத்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய முரளி விஜய் 26 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து கேப்டன் டோனி இறங்கினார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. டோனி 37 ரன்னுடனும், ராயுடு 42 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா 4, டி காக் 8  ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.  சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடினர். மும்பை அணி 101 ரன்கள் இருந்தபோது இஷான் கிஷன் 28 வெளியேறினார். அடுத்து வந்த குர்ணால் பாண்டியா டக் முறையில் வெளியேறினார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யா குமார் யாதவ் அணியை வெற்றி பெற செய்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதம் உள்ள நிலையில்  சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூர்யா குமார் யாதவ் 71 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்,

    சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2019 #CSKvMI #Qualifier
    ×