என் மலர்
நீங்கள் தேடியது "ஆம்லெட்"
- சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள்.
- வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு முட்டை, மீன் போன்றவற்றை கொடுப்பதில் தாய்மார்களுக்கு பெரும் சாவாலாக உள்ளது. மீன் மற்றும் முட்டையில் அதிகப்படியாக சத்துக்கள் உள்ளன. சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள். ஆனால் மீன் வறுவலில் அதிக எண்ணெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எந்த உணவாக இருந்தாலும் அதை வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் மீன் மற்றும் முட்டையை எப்படி குழந்தைகளுக்கு எளிய முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
சதை அதிகம் உள்ள மீன் - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 5
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
• முதலில் நன்கு சதை பகுதி உள்ள மீனை சுத்தம் செய்து கொள்ளவும்
• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
• இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருந்த மீன்களை வைத்து நன்கு ஆவி வரும் வரை (15 நிமிடம்) வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
• வேக வைத்த மீன்களை எடுத்து பொடி பொடியாக மீன் முள்களை நீக்கிவிட்டு உதிர்த்து கொள்ளவும்.
• ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
• பின்னர் வதக்கிய இந்த கலவையுடன் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.
• இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
• பின்னர் இந்த மீன் கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
• முட்டையுடன் தயாரித்து வைத்திருந்த முன் கலவையை சேர்த்து நன்கு டிப் செய்யவும்.
• இதனுடன் முட்டைக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.
• ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் நன்கு சூடு ஆனதும். சிறிது எண்ணெயை கல்லின் மீது பூசவும்.
• பின்னர் முட்டை ஆம்லெட் செய்வதற்கான கலவையை எடுத்து கல்லில் ஊற்றவும்.
• ஒரு புறம் வெந்தவுடன், மறுபுறம் திருப்பவும்.
• இதோ இப்போது சுவையான ஃபிஷ் ஆம்லெட் ரெடி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான உணவும் ஆகும்.
- முட்டையை வைத்து பல்வேறு வகையான ஆம்லெட்டுகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
உருளைக்கிழங்கு - 2
மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.
நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.
சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.
சிவப்பு முட்டைக்கோஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
முட்டை - 2
ப.மிளகாய் - 2
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
சிவப்பு முட்டைக்கோஸ், கேரட், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சிவப்பு முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டை கலவையை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.