search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95897"

    உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்த உள்ளது. #BCCI #ICC #WorldCup2019 #PulwamaAttack
    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது. இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுத்தார். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

    புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று முன்னாள் கேப்டன் அசாருதீன், ஹர்பஜன்சிங் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    மற்றொரு முன்னாள் கேப்டனான கங்குலி “பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

    இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது. அப்படி தடை விதிக்காவிட்டால் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுக்கும்.



    இது தொடர்பான கடிதத்தை பி.சி.சி.ஐ.யின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோகி தயாரித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவின் தலைவர் வினோத் ராயன் ஒப்புதலின் பேரில் இந்த கடிதம் தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் இன்று இறுதி முடிவு செய்கிறது. அதன்பிறகு இந்த கடிதம் ஐ.சி.சி.க்கு அனுப்பப்படும்.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. வினோத்ராய் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான் செஸ்டரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டது. #BCCI #ICC #WorldCup2019 #PulwamaAttack
    2019-ம் ஆண்டு ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. #ICC #BCCI #WorldCup2019 #Pulwamaattack
    புதுடெல்லி:

    காஷ்மீரில், இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறும்போது, ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி லீக்கில் பாகிஸ்தானுடன் (ஜூன் 16-ந்தேதி) மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே உலக கோப்பையை வெல்லக்கூடிய திறமை இந்திய அணியிடம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.



    பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் வந்து நாம் விளையாடாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ள பிசிசிஐ உலககோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. #ICC #BCCI #WorldCup2019 #Pulwamaattack
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்ததால், இங்கிலாந்து அணி ஐசிசி தரவரிசையில் 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. #ICCTestRankings
    இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து, கடைசி டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதேவேளையில் ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்றது.

    படுதோல்வியால் இங்கிலாந்து 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியா தொடர்ந்து முதல் இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து 3-வது இடத்தையும், ஆஸ்திரேலியா 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பிராத்வைட் நியமிக்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று, ஐசிசி அந்த அணியின் கேப்டன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது.

    இதனால் செயின்ட் லூசியாவில் வரும் சனிக்கிழமை தொடங்கும் 3-வது போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கிரைக் பிராத்வைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆண்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக ஹோல்டருக்கு ஐசிசி தடைவிதித்தது. இதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #WIvENG
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டிகுவாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மெதுவாக பந்து வீசியதால் அவரை சஸ்பெண்டு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐசிசி-யின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வார்னே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டது. ஹோல்டரை சஸ்பெண்டு செய்து இருப்பது முட்டாள்தனமான முடிவாகும். ஐசிசி-யின் இந்த முடிவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஐசிசி-யின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    வாகன் கூறும்போது, ‘‘246 ஓவர்களில் டெஸ்ட் போட்டி முடிந்து விட்டது. அதாவது 2.6 நாளில் முடிந்து உள்ளது. மெதுவாக பந்து வீச்சு என்ற காரணத்துக்காக ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.

    இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் ஹோல்டர் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    டோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் என டுவிட்டரில் ஐசிசி தெரிவித்து உள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. #MSDhoni #ICC
    ஸ்டெம்புக்கு பின்னால் டோனி நிற்கும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என ஐசிசி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு இணையத்தில் மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி, கிரீஸைவிட்டு வெளியேவந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசமை, கண் இமைக்கும் நேரத்திற்குள் ரன் அவுட் ஆக்கினார்.

    இந்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டார்.

    இதற்கு ஐசிசி, ஸ்டெம்பிற்கு பின்னால் டோனி நிற்கும்போது, பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸைவிட்டு காலை எடுக்காதீர்கள் என பதில் அளித்திருந்தது. ஐசிசியின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. #MSDhoni #ICC
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கடைசி டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvENG #JasonHolder #ICC
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்டில் வென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.



    இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் ஐ.சி.சி. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதனால் பிராத்வெயிட் அந்த டெஸ்டுக்கு கேப்டனாக இருப்பார். ஹோல்டர இடத்தில் கீமோ பவுல் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG #JasonHolder #ICC
    பெண்கள் குறித்து ஹர்திக் பாண்டியா கூறிய கருத்துப் பற்றி கேள்வி கேட்டதற்கு ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளித்துள்ளார். #ICC #HardikPandya
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவரும் தொடக்க பேட்ஸ்மேனுமான லோகேஷ் ராகுலும்  ‘காபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது பெண்கள் குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தனர்.

    இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் பிசிசிஐ இருவரையும் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் விசாரணை தாமதமாகி வருவதால் தற்போது இருவரையும் விளையாட அனுமதித்துள்ளது.

    இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிக்காக ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்சன் இந்தியா வந்துள்ளார்.

    அவரிடம் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில் ‘‘இந்த விவகாரத்தில் வீரர் இடம்பிடித்துள்ள நாட்டிற்குத்தான் கவலை. பொதுவாக இந்திய அணி சிறந்த பண்புடையது. அவர்கள் போட்டிக்கு வந்த பிறகு நடுவருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் சரியான உத்வேகத்துடன் விளையாடுகிறார்கள்.

    இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. விராட் கோலி கிரிக்கெட்டிற்கான சிறந்த தூதர். அவர் டி20 கிரிக்கெட் போட்டியின் மீதான பேரார்வம் பற்றி மட்டும் பேசுவதில்லை. டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை பற்றியும் பேசுகிறார். சிறந்த வீரர்கள் அனைவரும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட ஆசைப்பட வேண்டும்’’ என்றார்.
    சர்பிராஸ் அகமதுக்கு ஐசிசி நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ICC #PCB
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ நான்கு விக்கெட் வீழ்த்தியதுடன், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    37-வது ஓவரின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பெலுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து ஸ்லெட்ஜிங் செய்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் சர்பிராஸ் அகமதின் குரல் தெளிவாக பதிவாகியிருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

    தனது கருத்துக்கு டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார் சர்பிராஸ் அகமது. அத்துடன் பெலுக்வாயோவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் சர்பிராஸ் அகமதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்றார்.

    இதனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்தது. ஆனால் போட்டி நடுவர் இந்த பிரச்சனையை ஐசிசி பார்வைக்கு கொண்டு சென்றார். ஐசிசி நான்கள் போட்டிகளில் விளையாட சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதித்தது.

    இந்நிலையில் ஐசிசி தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘சர்பிராஸ் அகமதுக்கு எதிரான ஐசிசி-யின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சர்பிராஸ் அகமது டுவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் மன்னிப்பு கேட்டார். டு பிளிசிஸ் நாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறினார். இதனால் வீரர்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட்டதாக எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து கோரிக்கைகளும் ஐசிசி-யால் புறக்கணிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது. #ICC #AmbatiRayudu
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு. பகுதி நேர பந்து வீச்சாளரான இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார்.

    அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு, தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்திருந்தது.

    ஆனால் இன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. இதனால் 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி அதிரடி தடைவிதித்துள்ளது. இனிமேல் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச இயலாது. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பந்து வீசலாம்.
    தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறிக்கு எதிரான வகையில் ஸ்லெட்ஜிங் செய்த சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SAvPAK
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டர்பனில் 2-வது போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் சொற்ப ரன்களில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்கா சேசிங் செய்யும்போது, நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பெலுக்வாயோ சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து பெலுக்வாயோவை ஸ்லெட்ஜிங் செய்தார்.

    உருது மொழியில் பேசிய சர்பிராஸ் அகமதின் வாய்ஸ், ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதற்கு அர்த்தம் தெரிந்த பின்னர் கடும் விமர்சனம் எழும்பியது. சர்பிராஸ் அகமது 3-வது போட்டி தொடங்குவதற்கு முன் பெலுக்வாயோவிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டார்.

    இருந்தாலும் ஐசிசி இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் சர்பிராஸ் அகமது விளையாடமாட்டார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்து கவுரவப்படுத்தி உள்ளது. #ICC #Dhoni
    துபாய்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கவுரவித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் டோனியின் படத்தை வைத்து கவுரவப்படுத்தி உள்ளது.

    ஐ.சி.சி. ட்விட்டர் கவர் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள டோனியின் படத்தை அவரது ரசிகர்கள் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஐ.சி.சி.க்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். #ICC #Dhoni
    ×