search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிகுமார்"

    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கும் ‘அயோத்தி’ படத்தின் முன்னோட்டம்.
    பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். 'அயோத்தி' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளது.

    மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார்.

    படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்," என்றார்.

    சசிகுமார்
    சசிகுமார்

    மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,” என்றார் அவர். 

    'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பட ரிலீஸில் சசிகுமாருக்கு போட்டியாக களமிறங்க உள்ளார்.
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. 

    விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். 

    குட்லக் சகி படத்தின் போஸ்டர்
    குட்லக் சகி படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ‘குட்லக் சகி’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’ ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சசிகுமார் படங்களுக்கு போட்டியாக கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ திரைப்படம் களமிறங்கி உள்ளது.
    இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை ஆகும்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சசிகுமார், இவர் கைவசம் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதன்படி, பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.

    இதேபோல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

    கொம்புவச்ச சிங்கம்டா, ராஜவம்சம் படங்களின் போஸ்டர்
    கொம்புவச்ச சிங்கம்டா, ராஜவம்சம் படங்களின் போஸ்டர்

    இந்நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக, சசிகுமாரின் மற்றொரு படமும் களமிறங்கி உள்ளது. கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படமும் நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சசிகுமார் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    பேட்ட படத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியிருக்கும் சசிகுமார், அடுத்ததாக ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    பேட்ட படத்திற்கு பிறகு சசிகுமார் நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

    இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு ரோனி ராப்பில் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவையும், வெங்கட் ரமணன் படத்தொகுப்பையும், சிவகுமார் யாதவ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    சுந்தர்.சி-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    `பேட்ட' படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2', கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கென்னடி கிளப் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.



    சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் 

    நடிக்கின்றனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது. சென்னை மற்றும் பொள்ளாச்சியில் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் - மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #KombuVatchaSingamda
    ‘குற்றம் 23’, ‘தடம்’ படங்களை தொடர்ந்து ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர்குமார் தயாரிப்பில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. 

    ‘சுந்தரபாண்டியன்’ வெற்றியை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபாகரன் - சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.



    இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஹரீஷ் பெரடி, துளசி, தீபா ராமனுஜம், செண்ராயன் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குநர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    1990-1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 


    ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள செய்துள்ள இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். டான் பாஸ்கோ படத்தொகுப்பையும், அன்பறிவ் ஸ்டன்ட் காட்சிகளையும் கவனிக்கின்றனர். #KombuVatchaSingamda #Sasikumar #MadonnaSebastian

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `கென்னடி கிளப்' படக்குழுவின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #KennadiClub #Sasikumar
    `ஏஞ்சலினா', `சாம்பியன்' படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Sasikumar #NVNirmalKumar
    சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    பாரதிராஜா ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை செல்கிறது. #Sasikumar #NVNirmalKumar #SarathKumar #Bharathiraja

    சலீம் பட இயக்குநர் என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Sasikumar #NVNirmalKumar
    விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் என்.வி.நிர்மல்குமார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இவர் அடுத்ததாக அரவிந்த்சாமி - திரிஷாவை வைத்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.

    தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக அந்த படம் இன்னமும் ரிலீசாகாமல் உள்ளது. இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நிர்மல்குமார் வெளியிட்டுள்ளார்.


    இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

    எனது அடுத்த படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் எனது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #Sasikumar #NVNirmalKumar

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

    படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.



    இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 

    தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார். #KennedyClub #Sasikumar
    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'.

    இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.



    இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

    இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி 2 கோடி செலவில் உருவாகி வருகிறது. #Sasikumar #KennedyClub
    சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15 கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

    தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.



    படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்துள்ளார்.

    ×