search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96360"

    விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.
    ஆமதாபாத் :

    குஜராத்தில் உள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அம்மாநில அரசு ரூ.1,500 வரை நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

    இதன்படி, ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது ரூ.1,500 இவற்றில் எது குறைவோ அந்த தொகை நிதியுதவியாக வழங்கப்படும். இதற்கான பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பலனடையலாம். ஆனால், கூட்டாக விவசாயம் செய்பவர்களில், தலா ஒருவருக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். ஸ்மார்ட்போனை தவிர, இயர்போன், பவர் பேங்க், சார்ஜர் போன்ற சாதனங்கள் வாங்க இத்திட்டம் பொருந்தாது.

    விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.

    விவசாயிகளுக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வானிலை தகவல்கள், பூச்சி மருந்து விவரங்கள், நவீன பண்ணை தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவது நல்லது என்று மாநில வேளாண்துறை தெரிவித்துள்ளது.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள மோடி இன்றிரவு தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில்  மாபெரும் வெற்றிபெற்று, குறிப்பாக குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.

    கமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அடுத்த பிரதமராக பதவியேற்க வருமாறு நேற்றிரவு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக உங்கள் அனைவரிடமும் ஆசிபெற நான் இன்று இங்கு வந்திருக்கிறேன் என குறிப்பிட்ட மோடி அகமதாபாத் நகரில் உள்ள பாஜகவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். 

    தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்தார். பின்னர், காந்திநகர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார். 
    பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வெற்றிக்கு பின்னர் முதன்முறையாக இன்று மாலை அகமதாபாத் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
     
    அகமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய மோடி, சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 மாணவ-மாணவிகளின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்த வெற்றிவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதா, வேண்டாமா? என்று நேற்றுவரை பெரிய மனக்குழப்பத்தில் இருந்தேன். சூரத் தீவிபத்தில் தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் உறவினர்களும் அவர்களது எதிர்காலத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களின் மனக்காயங்களை ஆற்றும் சக்தியை அளிக்குமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர்  தெரிவித்தார். 

    ஆறாம்கட்ட பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக அமோக வெற்றிபெற்று 300-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று நான் பேசினேன். அதனால் என்னை பலர் கேலி செய்தனர். ஆனால், நான் கணித்தவாறு வலிமையான அரசாங்கம் அமைய மக்கள் பெருவாரியான வெற்றியை எங்களுக்கு அளித்துள்ளனர்.

    அடுத்த பிரதமராக பதவியேற்க வருமாறு நேற்றிரவு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக உங்கள் அனைவரிடமும் ஆசிபெற நான் இன்று இங்கி வந்திருக்கிறேன். வரும் ஐந்தாண்டுகள் 1942-1947 ஆண்டுகளுக்கிடையிலான காலக்கட்டத்தைப்போல் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். உலக வரிசையில் இந்தியா முன்னர் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் ஆண்டுகளாக அடுத்த ஐந்தாண்டுகள் அமையும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

    அவர் பேசி முடித்த பின்னர் அங்கு திரண்டிருந்தவர்கள் தங்களது கைபேசியில் உள்ள விளக்குகளால் மேடையை நோக்கி ஓளிவீச வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர், அகமதாபாத் நகரில் உள்ள பாஜகவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்தார்.

    இன்றிரவு தனது தாயாரை சந்திக்கும் பிரதமர் மோடி அவரிடம் வாழ்த்து பெற்ற பின்னர் நாளை வாரணாசி தொகுதிக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீவிபத்தில் சிக்கி அங்குள்ள பயிற்சி வகுப்பில் இருந்த 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.



    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக போட்டியிட்ட 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார். 



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை குஜராத் மாநிலம் செல்கிறேன். அங்கு எனது தாயை சந்தித்து அவரது ஆசியை பெறுகிறேன். மேலும் நாளை மறுதினம் வாரணாசி தொகுதிக்கு சென்று எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
    குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல், பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

    இந்த தேர்தலில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. 

    குஜராத் மாநிலத்தின் நவ்சாரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.ஆர். பாட்டீல், 9,69,430 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ்பாய் பீம்பாய் பட்டேல் 2,81,663 வாக்குகள் பெற்றார்.



    இதன்மூலம் சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதேபோல், மேலும் 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

    அரியானாவின் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் பாட்டியா 6,54,269 வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானின் பில்வாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுபாஷ் சந்திர பகேரியா 6,10,920 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    குஜராத்தின் சூரத் நகரில் வணிக வளாகத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 18 குழந்தைகள் சிக்கி பலியாகினர்.



    இந்நிலையில், சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
    குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.

    இன்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.



    மளமளவென பரவி வரும் தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு படையினர் போராடி வருகி்ன்றனர்.

    சூரத் நகரில் தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு 379 சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, செயின் பறிப்பில் ஈடுபடுவதை குறைக்கும் வகையில் தண்டனையை கடுமையாக்க மாநில அரசு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

    அதன்படி, செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு இனி 10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்திற்கான ஒப்புதலை பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளது.



    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த புதிய சட்டத்தின்படி செயின் பறிப்பில் ஈடுபட முயன்று சிக்கும் குற்றவாளிகளுக்கு குறைந்தது 5 ஆண்டும், அதிகபட்சமாக 7 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பாராளுமன்ற தேர்தலின் மூன்றாவது கட்டத்தில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, அருண் ஜெட்லி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 #Modi #LKAdvani #ArunJaitley
    அகமதாபாத்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
     
    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 



    பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஷான்பூர் ஹிந்தி பள்ளியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியும், நிதி மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான அருண் ஜெட்லியும் தங்கள் வாக்குகளை பதிவுசெய்தனர். #LokSabhaElections2019 #Modi #LKAdvani #ArunJaitley
    வடமாநிலங்களில் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #RainStrom
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் தற்போது புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையில் சிக்கி மக்கள் பலியாகி வருகின்றனர்.

    ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ராஜஸ்தானில் அதிகபட்சமாக 25 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும் பலியாகினர். மேலும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன்  மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #RainStrom
    குஜராத் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக போராட்டம் நடத்திய பெண்களிடம் நீங்கள் எனக்கு போட்ட ஓட்டின் அளவுக்கு தான் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிய மந்திரியின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. #KunwarjiBavaliya #Gujaratminister
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பாஜக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை மையமாக வைத்து ராஜ்கோட் மாவட்டத்தில் கனேசாரா கிராமத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக குஜராத் மாநில குடிநீர் வினியோகம் மற்றும் கால்நடைத்துறை மந்திரி கன்வர்ஜி பவாலியா வாக்கு சேகரிக்க வந்தார். அவரை வழிமறித்த பெண்கள் தங்கள் பிரச்சனையை கூறி முறையிட்டனர்.


    அவர்களிடம் கடுகடுப்பாக பேசிய மந்திரி கன்வர்ஜி பவாலியா, கடந்த தேர்தலில் நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டு பிரசாரம் செய்தும் நீங்கள் எனக்கு 55 சதவீதம் வாக்குகளை தானே அளித்தீர்கள்? என்று கிண்டலாக கேட்டார்.

    அவருடன் வந்திருந்த அந்த தொகுதியின் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பரத் கோக்ரா நீங்கள் ஓட்டு போட்டது போல் பாதி அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என கேலியாக குறிப்பிட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KunwarjiBavaliya #Gujaratminister
    ×