search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96783"

    தொழிற்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறி தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது அரசு வக்கீல்கள் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புகாரெஸ்ட் :

    தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தெற்கு பகுதியில் உள்ள பாபெனி நகரில் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.

    ராணுவ தொழில்நுட்பத்தை தயாரிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த ஆலை ருமேனியா ராணுவத்துக்கும், நேட்டோ படைகளுக்கும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து, வினியோகம் செய்து வருகிறது.

    இந்த ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு கண்ணி வெடிகள், கையெறி குண்டுகள் என ராணுவத்துக்கு தேவையான அனைத்து வகை ஆயுதங்களும் உற்பத்தி செய்யப்படுகிறன.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த தொழிற்சாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தொழிலாளர்கள் அனைவரும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

    அவர்களில் சிலர் கண்ணி வெடிகளை செயலிழக்க செய்து, சோதிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கண்ணி வெடி ஒன்று வெடித்து சிதறியது.

    இதை தொடர்ந்து, தொழிற்சாலையில் இருந்த, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடுத்தடுத்தது வெடித்தன. இதில் அந்த தொழிற்சாலையே அதிர்ந்தது.

    தொழிற்சாலையின் பல பகுதிகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் உயிரைக்காப்பற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதற்கிடையில் இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த கோரவிபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இதனிடையே தொழிற்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறி தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது அரசு வக்கீல்கள் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    சீனாவில் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #ChinaChemicalPlantBlast
    பீஜிங்:

    கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கித் தவித்த பலரை மீட்டனர். கடுமையாக போராடி இன்று அதிகாலையில் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிகவும் தீவிரமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.



    அதன்பின்னர் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால்  இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 44 ஆக உயர்ந்தது. சுமார் 90 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால், அப்பகுதியில் 2.2 ரிக்டர் அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #ChinaChemicalPlantBlast
    உத்தரப்பிரதேசத்தின் படோகி மாவட்டத்தில் கார்பெட் தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #UPExplosion
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் படோகி-வாரணாசி சாலையில் உள்ள ரோதாகன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கார்பெட் தயாரிப்பு தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் பட்டாசு விற்பனையும் செய்து வருகிறார். 

    இன்று மதியம் வழக்கம்போல் கார்பெட் தொழிற்கூடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்துச் சிதறியது. 
     
    சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள், கார்பெட் தொழிற்கூடத்தில் வேலை செய்தவர்கள் என பலர் இடிபாடுகளில்  சிக்கிக்கொண்டனர். நெடுஞ்சாலையில் கட்டிட சிதறல்களும், மனித உடல் பாகங்களும் சிதறிக் கிடந்தன.



    தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிவிபத்தில் 4 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், உ.பி.யின் படோகியில் கார்பெட் தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #UPExplosion
    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் எரிவாயு கசிவினால் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். #4killed #Parisblast #Parisbakeryblast
    பாரிஸ்:

    பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் உள்ள 9-வது மாவட்டம் பகுதியில் ஒரு பேக்கரியில் இன்று எரிவாயு கசிவினால் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கரி பயங்கரமாக தீபிடித்து ஏரிந்தது.

    தகவல் அறிந்து பல வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு படையினர் இருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.



    காயமடைந்த சுமார் 50 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #4killed #Parisblast #Parisbakeryblast
    ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். #JapanBlast #Sapporo
    சப்போரோ:

    ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு கசிந்த வாசனையும் உணரப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

    விபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    இந்தத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து சப்போரோ நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JapanBlast #Sapporo


    பெங்களூருவில், இந்திய அறிவியல் கழக ஆய்வகத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தில் ஆராய்ச்சியாளர் இறந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். #Scientist #Explosion #IndianInstituteScience
    பெங்களூரு:

    பெங்களூரு சதாசிவநகரில் இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ளது. இங்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் பல்வேறு துறை தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இங்கு விண்வெளி என்ஜினீயரிங் துறையின் கீழ் அதிவேக மற்றும் அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வகம் தொடங்கப்பட்டது.

    தனியார் நிறுவனம் அமைத்த இந்த ஆய்வகமானது இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளி என்ஜினீயரிங் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஜெகதீஷ் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வகத்தில் நேற்று 4 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மதியம் திடீரென்று ஆய்வகத்தில் ஏதோ வெடித்தது போன்று சத்தம் கேட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, ஒருவர் 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து கிடந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அறிந்தவுடன் சதாசிவநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆராய்ச்சியாளரான மனோஜ் (வயது 30) என்பவர் இறந்ததும், அதுல்யா, நரேஷ் குமார், கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இருப்பினும் ஆய்வகத்தில் எப்படி வெடிவிபத்து நிகழ்ந்தது? என்பது தெரியவில்லை. ஆனாலும் ஆய்வகத்தில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், ஹீலியம் போன்ற கியாஸ் சிலிண்டர்களில் ஏதேனும் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் நிரஞ்சன்ராஜ் அர்ஸ் கூறுகையில், ‘இந்திய அறிவியல் கழகமும், தனியார் நிறுவனமும் சேர்ந்து நடத்தும் ஆய்வகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆய்வகத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவில் தான் வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியும்’ என்றார். இந்த சம்பவம் நேற்று இந்திய ஆய்வு கழகத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. #Scientist #Explosion #IndianInstituteScience
    சீனாவில் உள்ள கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinaBlast #CarFactoryBlast
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் டாங்பெங் பகுதியில் கார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று இந்திய நேரப்படி 11.40 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதையடுத்து, 220 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 150க்கு மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.



    இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #ChinaBlast #CarFactoryBlast
    மகாராஷ்டிர மாநிலத்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #MaharashtraExplosion #PulgaonOrdanceDepot
    வார்தா:

    மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் புல்கான் நகரில் இந்திய  ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே உள்ள காலி மைதானத்தில், பயன்படுத்தப்படாத காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை வெடிமருந்து தொழிற்சாலை மேற்கொண்டு வருகிறது.

    இன்று காலையில் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில், வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர், இரண்டு கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.



    இதேபோல் புல்கான் ஆயுதக் கிடங்கில் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #MaharashtraExplosion #PulgaonOrdanceDepot

    ×