search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97071"

    சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை மீறி இந்த அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

    இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை மீறி இந்த அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் தெளிவான அதிகார துஷ்பிரயோகத்தை சட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே, இந்த சட்டங்களை செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

    உச்ச நீதிமன்றம்

    இந்த அவசர சட்டங்கள், புலனாய்வு முகமைகளின் மீதான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அவற்றின் சுயாதீன செயல்பாட்டிற்கு விரோதமானது. பாராளுமன்றம் கூடுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக இந்த அவசரச் சட்டங்களை வெளியிடுவதற்கான எந்த அடிப்படை காரணங்களும் இல்லை.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.

    இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மோகுவா மொய்த்ராவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    மோடி அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை ஸ்திரமின்மை ஆக்குவதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.
    புதுடெல்லி:

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  வினீத் நரேன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் நிலையாக அந்த பதவியில் நீடிக்கிறார்கள். தற்போது, கொண்டுவந்துள்ள அவசர சட்டங்களால், கூடுதலாக 3 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு வழங்க முடியும். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மோடி அரசாங்கம் அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை ஸ்திரமின்மை ஆக்குவதற்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை உதவியாளர்களாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார். 

    எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ரெய்டு நடத்துகிறது. இப்போது, இந்த உதவியாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் வழங்கப்பட்டு, வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கு தீங்கிழைக்கும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் சுர்ஜேவாலா கூறி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும் இந்த அவசர சட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பாக கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
    புதுடெல்லி:

    அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை இருந்ததை, 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    மத்திய ஊழல் தடுப்பு ஆணைய திருத்தச் சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இன்று வெளியிடப்பட்ட அவசர சட்டத்தின்படி, சிபிஐ அல்லது அமலாக்கத்துறை இயக்குனரை முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கலாம். தேவைப்பட்டால், பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். ஒவ்வொரு ஆண்டாக மூன்று முறை பதவிக்காலம் நீட்டிக்கப்படவேண்டும்.
    அனில் தேஷ்முக்கின் விசாரணைக் காவலை நீட்டிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    மும்பை:

    பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை விசாரணைக் காவலில் எடுத்து விசாரித்த அதிகாரிகள், நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அனில் தேஷ் முக்கிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. 

    இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த விடுமுறைக்கால சிறப்பு அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்ததுடன், அனில் தேஷ்முக்கை நவம்பர் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. 

    தேஷ்முக்குடன் அவரது உதவியாளர்கள் குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

    அனில் தேஷ்முக்கின் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள மதுபார்கள், ஹோட்டல்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்து தரக் கோரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்துவதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார். 

    ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை தரப்பில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் தேஷ்முக்கிடம் கடந்த திங்கட்கிழமை 12 மணி நேரம் விசாரணை நடத்தி நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் அவரை நவம்பர் 6ம் தேதி வரை விசாரணைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணைக் காவல் முடிந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அனில் தேஷ் முக்கிடம் இருந்து மேலும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. 

    தேஷ்முக்குடன் அவரது உதவியாளர்கள் குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
    பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அனில் தேஷ்முக் அம்மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

    மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இதில், அப்போதைய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்குமாறு மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

    இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பதவியை ராஜினமா செய்த அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு சொந்தமான 4.20 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    அமலாக்கத்துறை

    பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே, தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்தது.

    இதற்கிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே உதவியுடன், மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து 4.70 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதில் 4.18 கோடி ரூபாயை போலி நிறுவனத்தின் பெயரில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அனில் தேஷ்முக் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 

    பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

    சம்மனை ரத்து செய்யக் கோரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் தேஷ்முக் நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் நேற்று இரவு 12 மணியளவில் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார்.

    சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது.

    குர்கான், பீகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இதேபோல லண்டனில் ரூ.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை வாங்கியதிலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா மீது உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முன்ஜாமீன் பெற்று இருந்தார். அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க வேண்டும், அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது என்பது போன்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய கோரியும், வெளிநாடு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 3-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே வெளிநாட்டில் சட்ட விரோத சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக வதேராவுக்கு அமலாக்கத்துறை நேற்று புதிய சம்மனை அனுப்பி இருந்தது. இன்று ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை10.30 மணியளவில் ராபர்ட் வதேரா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    முன்னதாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நீதித்துறையை நான் மிகவும் மதிக்கிறேன். நான் இதுவரை 11 முறை ஆஜராகி இருக்கிறேன். 70 மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. எதிர்காலத்திலும் நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ளது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

    இவ்வாறு வதேரா கூறியுள்ளார்.
    சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா நாளை ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது.

    குர்கான், பீகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இதேபோல லண்டனில் ரூ.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை சட்ட விரோதமாக வாங்கியதிலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு வதேரா மீது உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்று இருந்தார். வதேராவுக்கு ஏற்கனவே பல முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஆஜராகாமல் இருந்தார்.


    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மனை இன்று அனுப்பியது.

    நாளை காலை10.30 மணிக்கு இணைப்பு விசாரணைக்கு ஆஜராகுமறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
    சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை ரத்து செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தியது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இவ்வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.

    இதற்கிடையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா சமீபத்தில் மனு செய்திருந்தார்.


    லண்டன் பங்களா

    இந்நிலையில், ராபர்ட் வதேராவுக்கும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ராபர்ட் வதேரா சரியாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அதனால், அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

    எனவே, இந்த வழக்கின் தன்மை அறியாமல்  ராபர்ட் வதேராவுக்கும் அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறையின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறையின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்குமாறு ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி சந்திர சேகர் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. #ED #DayanidhiAzhagiri
    புதுடெல்லி:

    தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி. இவர் தி.மு.க.வில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார். இவரது மகன் தயாநிதி அழகிரி.

    இந்நிலையில், தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

    இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பணமோசடி தடுப்பு சட்டம், 2002ன் கீழ் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும்.  சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள் ஈட்டப்பட்டு உள்ளன.

    இந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பிற குற்றவாளிகள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன் பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

    பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில், இவர்கள் லாப நோக்குடன் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபட்டது, சட்டவிரோத முறையில் குவாரி நிறுவனம் நடத்தி, அதன்வழியே வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளது. #ED #DayanidhiAzhagiri
    சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    புதுடெல்லி:

    தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.



    துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜீவ் சக்சேனா அளித்த தகவலின் பேரில், இந்த ஊழலில் சூசன் மோகன் குப்தாவின் தொடர்பு தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரது ஜாமீன் மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குப்தாவின் வக்கீல், குப்தா சமூகத்துடன் ஆழமாக பின்னி பிணைந்தவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வலியுறுத்தினார்.

    அந்த வாதத்தை அமலாக்கத்துறையின் அரசு சிறப்பு வக்கீல்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பின்னி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. #EDAttaches #OmPrakashChautala
    புதுடெல்லி:

    இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னர் அரியானா மாநில முதல் மந்திரியாக  பதவி வகித்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது பொருளாதார அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான டெல்லி பஞ்சகுலா மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது. #EDAttaches #OmPrakashChautala
    ×