என் மலர்
நீங்கள் தேடியது "சினேகா"
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhanush #Sneha
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் தனுசுக்கு இரட்டை வேடம் எனத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் ஒரு ஹீரோயினாக நடிகை சினேகா கமிட் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியாத நிலையில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
We are happy with @dhanushkraja@durairsk@omdop and our wonderful cast & crew for their great work 💪. Our first schedule at Kutralam completed successfully. Onto second schedule shortly. pic.twitter.com/PcrHRhhin3
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) April 6, 2019
குற்றாலத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் அப்பா தனுசின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளராக விவேக் மெர்வின் ஒப்பந்தமாகியுள்ளனர். #Dhanush #Sneha
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Dhanush
அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸின் 34-வது படத்தை துரை செந்தில்குமாரும், 35-வது படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர்.
இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சினேகா இணைந்து நடிக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சரபம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். மேலும் சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Dhanush #Sneha #NaveenChandra
தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடக்கும் நிலையில், ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தனர். #Dhanush #Snekha
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. அதை பார்வையிட்ட பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மற்றும் நடிகை சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
அவர்களை கோவில் பட்டாச்சாரியார்கள் வரவேற்று ஆண்டாள் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐஸ்வர்யா, நடிகர் பிரசன்னா ஆகியோர் ஆண்டாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்து கோவில் யானைக்கு பழங்களை வழங்கிவிட்டு மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்தனர்.

சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் இருவருக்கும் ஆசி வழங்கினார். தொடர்ந்து ஐஸ்வர்யாவும், பிரசன்னாவும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். #Dhanush #Snekha #AishwaryaDhanush #Prasanna
விரும்புகிறேன், பொன்னர் சங்கர், ஆயுதம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக பிரசாந்துடன் இணைந்திருக்கிறார் சினேகா. #Prashanth #Sneha
நடிகை சினேகா தமிழில் அறிமுகமான திரைப்படம் ‘விரும்புகிறேன்’. இதில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு பொன்னர் சங்கர் மற்றும் ஆயுதம் போன்ற படங்களில் பிரசாந்துடன் இணைந்து நடித்திருந்தார் சினேகா.
தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் நடித்துவரும் புதிய படத்தில் இவ்விருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். போயபட்டி சீனி இப்படத்தை இயக்கிவருகிறார். படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சல்மான் கானின் பயிற்சியாளரை அழைத்துவந்து சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறிக் கொண்டிருக்கிறார் ராம்சரண்.

இந்தப் படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி, விவேக் ஓபராய், பிரசாந்த், சினேகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் பிரசாந்த், சினேகா நான்காவது முறையாக இணைந்து இருக்கின்றனர்.