என் மலர்
நீங்கள் தேடியது "slug 97578"
- தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' படத்தின் கதாநாயகனாக ராமராஜன் நடிக்கிறார்.
- இப்படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

சாமானியன்
இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.

எம்.எஸ்.பாஸ்கர்
இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, 'பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றார்கள். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல இந்த ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார். அப்படி வனவாசம் சென்று வந்தவர்கள் அனைவருமே அரசாண்டதுபோல, இவரும் நிச்சயமாக அரசாள்வார்.

எம்.எஸ்.பாஸ்கர்
இவர் நடித்த சோலை புஷ்பங்கள் படத்திலேயே நான் டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக இவருடன் இணைந்து நடிக்கிறேன். இவர் எல்லாம் எதற்கு திரும்பவும் நடிக்க வருகிறார் என்று ராமராஜனை பார்த்து பலர் மீம்ஸ் போடுவதாக இங்கே சொன்னார்கள். நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று ஒருவரை பார்த்து கேள்வி கேட்பது எவ்வளவு அநாகரீகமான கேள்வியோ, ராமராஜனை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்பதும் அதுபோலத்தான்" என்றார்.
