என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கனா ரணாவத்"

    • டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
    • ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

    டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மாதம் 8 டாலர்கள் கட்டணத்துடன் 'டுவிட்டர் புளூ' வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறப்பு அம்சங்களை கொண்ட 'டுவிட்டர் புளூ' வசதி தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

     

    இந்தியாவில் 'டுவிட்டர் புளூ' வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என இந்திய பயனாளர்கள் டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்கை டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், 'ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் டுவிட்டர் புளூ வசதி அறிமுகமாகும் என தெரிவித்தார். விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், 'தீம்களை' மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் வசதி, நீண்ட மற்றும் அதிக தரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதிகளையும் 'டுவிட்டர் புளூ'வின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

     

    கங்கனா ரணாவத் பதிவு

    கங்கனா ரணாவத் பதிவு

     இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்த முடிவை நடிகை கங்கனா ரணாவத் ஆதரவளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' -வசதி அளிக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக டுவிட்டர் திகழ்கிறது. இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை. ஆகவே டுவிட்டர் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு மே மாதம், டுவிட்டர் விதிகளை தொடர்ந்து மீறியதற்காக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக நாடாளுமன்றத்தில் படபிடிப்பு நடத்த அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார். இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை. கங்கனா அனுமதி கேட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக கங்கனா தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.


    இந்திரா காந்தி - கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி - கங்கனா ரணாவத்

    இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

    இந்நிலையில் இப்படம் குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடித்து விடவில்லை. படப்பிடிப்பை ஆரம்பித்தபோது எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி. சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை.


    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    முன்பே சொல்லி இருந்தால் சிலர் எனது நிலையை பார்த்து கவலைப்பட்டு இருப்பார்கள். ஆனால் நான் விழுவதை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும், நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை என்மீது அக்கறை கொண்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

    • தமிழில் 'தாம்தூம்', 'தலைவி' படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத்.
    • கங்கனா ரணாவத் தன்னை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.





    தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.

    மராட்டிய அரசுடன் மோதினார். இதனால் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு வீட்டு மாடியிலும், கட்டிடத்திலும், பார்க்கிங்கிலும் 'ஜூம் லென்ஸ்' வைத்து தன்னை யாரோ வேவு பார்ப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். தன்னை வேவு பார்ப்பவர் அவரது மனைவியை பெரிய நடிகையாக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தற்போது கங்கனா வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், ''என்னை பற்றி கவலைப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். நேற்றிரவு முதல் என்னை சுற்றி சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லை. யாரும் என்னை பின்தொடரவும் இல்லை. சரியாக இருந்து கொள்ளுங்கள். இல்லையேல் வீட்டுக்குள் புகுந்து உங்களை தாக்குவேன். என்னை மனநோயாளி என்று அழைப்பவர்களுக்கு எதிராக நான் எந்த அளவுக்கு செல்வேன் என்று தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா.
    • ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்த மாதிரி என்னால் நடிக்க முடியாது என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

    பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து 2005-ல் வெளியான 'சந்திரமுகி' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் பிரபு, வடிவேலு, நாசர் ஆகியோரும் நடித்து இருந்தனர். 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. குறிப்பாக 'ரா ரா' என்ற பாடலில் சந்திரமுகியாக மாறி ஜோதிகா ஆடும் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    தற்போது 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் ஜோதிகாவுக்கு பதில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக வருகிறார். 'சந்திரமுகி-2' படத்தில் ஜோதிகாவுக்கு இணையாக கங்கனா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் 2019-ல் ஜோதிகா பேசிய வீடியோ ஒன்றை கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஜோதிகாவிடம் பாலிவுட்டில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு அவர் கங்கனா ரணாவத் என்று பதில் அளித்து இருப்பார்.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்


    இந்த வீடியோவை மேற்கோள் காட்டி கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "ஜோதிகா இப்படி சொல்லி இருப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது. 'சந்தரமுகி' படத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய சிறந்த நடிப்பை இப்போது தினமும் நான் பார்த்து வருகிறேன். காரணம் 'சந்திரமுகி-2' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது படமாக்கி வருகிறோம். 'சந்திரமுகி' முதல் பாகத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய நடிப்பு வியப்பை தருகிறது. அவர் நடிப்புக்கு இணையாக நடிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம்'' என்று கங்கனா பதிவிட்டுள்ளார்.

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத்.
    • இவர் சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.

    தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.


    கங்கனா ரணாவத்

    இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில், மும்பையில் தாதா சாகேப் பால்கே இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும், சிறந்த நடிகைக்கான விருது அவரது மனைவி அலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது. சினிமா வாரிசுகள் என்பதால் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கங்கனா சாடி உள்ளார்.

    "விருதுகள் பெறும் தகுதி இவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா. சிறந்த நடிகருக்கான விருது 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டிக்கும், நடிகைக்கான விருது மிருணாள் தாகூருக்கும், சிறந்த படத்துக்கான விருது 'காந்தாரா'வுக்கும் வழங்கி இருக்க வேண்டும்'' என்று இணையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    • நடிகை கங்கனா தற்போது 'எமர்ஜென்சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


    கங்கனா -ஜி.வி.பிரகாஷ்

    இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கங்கனா ரணாவத்தின்'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரம்மாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது" என்று கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது. நடந்தது உண்மையா அல்லது கற்பனையா என்பதைத்தாண்டி ஒரு கதையாக இந்தப்படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரையிட்ட இடங்களில் ஓரளவுக்கு வசூலை கொடுத்து வருகிறது.


    தி கேரளா ஸ்டோரி

    இந்த நிலையில் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:- இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது என்றால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்.

    ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என நினைக்கிறன். அப்படி அது உங்களை பாதிப்பதாக நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி என்று பேசியிருக்கிறார்.

    • பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
    • இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

    பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தற்போது 'சந்திரமுகி 2', 'எமர்ஜென்சி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக உள்ள கங்கனா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.


    கங்கனா ரணாவத்

    இமாசலப்பிரதேசத்தில் பஷிநாத் கோவிலில் பெண் ஒருவர் இரவு ஆடைகளை அணிந்து கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ததாக ஒரு நபர் இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அந்த பெண்ணை விமர்சித்திருந்தார். அந்த பதிவை பகிர்ந்த நடிகை கங்கனா அந்த பெண்கள் குறித்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி தனக்கு வாடிகனில் நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.


    ஷார்ட்ஸ் அணிந்த பெண் -கங்கனா ரணாவத்

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவை மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை, நான் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்ததற்காக வாடிகனில் என்னை வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் எனது ஓட்டலுக்குச் சென்று உடை மாற்ற வேண்டியிருந்தது. சாதாரணமாக இரவு ஆடைகளை அணியும் இவர்கள் கோமாளிகள் மற்றும் சோம்பேறிகள். அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை, ஆனால் அத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிமுறைகள் இருக்க வேண்டும் ..." என்று பதிவிட்டுள்ளார்.


    • இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
    • இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார்.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 




    • 'சந்திரமுகி -2' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் கதை கேட்காமலேயே சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டதாக இயக்குனர் பி. வாசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கங்கனாவிடம் இந்திப் படம் ஒன்றின் கதையை சொல்ல சென்றதாகவும் அப்போது 'சந்திரமுகி- 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதையும் அதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க யாரையும் முடிவு செய்யவில்லை என்று தெரிந்ததும் நானே நடிக்கிறேன் என்று கங்கனா ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
    • லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் 'ஆட்டநாயகி' பாடல் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    ×