என் மலர்
நீங்கள் தேடியது "slug 98432"
- இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகன் மற்றும் நட்டி நடித்துள்ள படம் பகாசூரன்.
- இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

மோகன் ஜி
இதனிடையே எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் இயக்குனர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்
அதில், ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு நேரம் சொல்லுங்க போனிகபூர் சார்.. அதற்கேற்ப எனது சிவசிவாயம் முதல் பாடல் வெளியீட்டு நேரத்தை மாற்றுவேன்.. இன்று எனக்கு டபுள் தமாக்கா.. என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி ஏகே61 படத்தின் அறிவிப்பை கேட்டு கொண்டு வருகின்றனர்.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.
- இப்படத்தின் தலைப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இடைவெளியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற அஜித் சென்னை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஏ.கே.61
சில தினங்களாக நடிகர் அஜித் இமயமலையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் அஜித் ஏ.கே. 61 படத்தில் பணியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.கே.61
இந்நிலையில் ஏகே61 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு "துணிவே துணை" என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குமுன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்திற்கு "துணிவே துணை" என்ற தலைப்பு வைக்க பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அஜித்
இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், அஜித்தை சந்திப்பதற்காக தேடி வரும் அவரது ரசிகர்கள், "உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம் சார்.." என்று கூற, உடனே அஜித், "தேடிட்டு இருக்கிங்களா... நா என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைகாரனா" என்று சிரித்தபடி கேட்டார்.

ரசிகர்களுடன் உரையாடும் அஜித்
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்... உங்களை எப்படியாவது பாக்கணும்னு ஆசையாய் சொல்ல, அதன் பிறகு அஜித் அவர்களின் விபரங்களை கேட்டு நலம் விசாரிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- அஜித் 'ஏ.கே.61' படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- இந்தியாவில் அஜித் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித், ஏகே61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அஜித்
பின்னர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலை, இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

அஜித் ரூட் மேப்
இந்நிலையில் அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு பைக் ரைடிங் உலக சுற்றுப் பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித் இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு 2023 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் இந்தியாவில் அவர் மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த பயணத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்துக்கு அவர் நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பதிவும் வெளியிட்டிருந்தார்.

அஜித்
சமீபத்தில் நடிகர் அஜித் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வீடியோ வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித் - மஞ்சுவாரியர்
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அஜித்
இந்த பயணத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்துக்கு அவர் நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பதிவும் வெளியிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது அஜித் கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அங்கு ராணுவ வீரர்கள் அஜித்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புத்தர் கோவிலில் வழிபாடு செய்த அஜித்
இந்நிலையில் அஜித் தற்போது புத்தர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளார். அப்போது புத்த விகாரத்தை அஜித் சுற்றி வந்து வழிபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித் - மஞ்சுவாரியர்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அஜித்
இதனிடையே லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் அஜித், லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மஞ்சு வாரியர் - அஜித்
இந்நிலையில், லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்து வருகிறார். இது குறித்து மஞ்சு வாரியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்" என்று குறிப்பிட்டு பயணத்தின்போது அஜித் உடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
Huge thanks to our Super Star Rider Ajith Kumar Sir! Honoured to be joining Adventure Riders India for my first ever two-wheeler road trip! Thank you Ajith Sir for introducing me to @suprej and @sardar_sarfaraz_khan. Thank you Sir!
— Manju Warrier (@ManjuWarrier4) September 2, 2022
Thank u #bineeshchandra for joining. pic.twitter.com/5FtVnrv4D1
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித் - எச்.வினோத்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இடைவெளியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற அஜித் சென்னை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அஜித்
சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும் வைரலாகின. சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் இமயமலையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் ஒரு வாரம் இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் அஜித் ஏ.கே. 61 படத்தில் பணியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியானது.

அஜித்
இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புக்காக அஜித் வெளிநாடு கிளம்பவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக பாங்காக்கில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக விரைவில் அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பாங்காக் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு 3 வாரங்கள் தங்கி இருந்து முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டு சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்
இப்படத்தை தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், 'வலிமை' படத்திற்குப் பிறகு, தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்
இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இடை வெளியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் சென்னை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் அஜித் சென்னை விமானநிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும் வைரலாகின.

அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் இமயமலையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரம் இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் அஜித் ஏ.கே. 61 படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.
- 'உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளவும்' என நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், 'வலிமை' படத்திற்குப் பிறகு, தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்
இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் லண்டனுக்கு குடுபத்துடன் சுற்றுலா சென்றுவந்த நடிகர் அஜித், பின்னர் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47-வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதில், நடிகர் அஜித்தின் அணி பல்வேறு பதக்கங்களை வென்றது.

அஜித்
இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை விமானநிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும் வைரலாகின. இந்நிலையில், 'உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளவும்' என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் என்ற பதிவை, அவரின் மேலாளர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதற்காக அஜித் இவ்வாறு திடீர் அறிவுரை கூறியுள்ளார் என்று தெரியவில்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இந்த பதிவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
- சில தினங்களுக்கு முன்பு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக அஜித் சென்றிருந்தார்.
- துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் குமார் வென்ற பதக்கங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி, போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி அஜித் வருகிறார்.

அஜித்
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் திருச்சி சென்றார். அதன்பின் அங்கு 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் அஜித் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களை குவித்த அஜித்துக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.