search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99473"

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை ஒதுக்க ஐபேட் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் மேற்கொண்ட திட்டத்தில் தற்போது 50 சதவீத ஐபேட் யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஆசிய சந்தைகளில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது, ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளிலும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 13 உற்பத்தி சீராக நடைபெற்று வந்தது. உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் அதிக யூனிட்களை வாங்கும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இது சாத்தியமானது.

     ஐபோன் 13

    வரும் மாதங்களில் ஐபேட் மாடல்களை விட ஐபோன் 13 மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே ஐபோன் 13 உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டிற்குள் இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இருவித அளவுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPad



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை 10.2 இன்ச் மற்றும் 10.5 இன்ச் என இருவித அளவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய 10.2 இன்ச் ஐபேட் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 9.7 இன்ச் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாவது தலைமுறை மாடலாக என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 10.5 இன்ச் அளவில் மற்றொரு ஐபேட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக ததகவல் வெளியாகியுள்ளது.



    இருவித அளவுகளில் உருவாகி வருவதாக கூறப்படும் புதிய ஐபேட்கள் தனித்தனியே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்கிரீன் அளவுகளை தவிர புதிய ஐபேட்களை ஆப்பிள் எவ்வாறு வித்தியாசப்படுத்தும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிளின் ஏழாம் தலைமுறை ஐபேட்களில் டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. டச் ஐ.டி. வழங்கப்படுவதால், ஆப்பிள் தனது ஐபேட் மாடலில் ஃபேஸ் ஐ.டி. அம்சத்தை வழங்காது என உறுதியாகியிருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய ஐபேட் அளவுகள் பற்றி எவ்வத விவரமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்திற்குள் ஆப்பிள் இரண்டு ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முன் புதிய ஐபேட் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPad #Apple



    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபேட் மினி 4 மாடலின் மேம்படுத்தப்பட்ட டேப்லெட் சாதனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐபேட் மினி 4 செப்டம்பர் 2015 இல் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி டேப்லெட் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இவற்றில் ஐபேட் மினி 5 மற்றும் என்ட்ரி-லெவல் ஐபேட் உள்ளிட்டவை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

    புதிய ஐபேட் மாடல்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐபேட் மினி 5 மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா செட்டப் மற்றும் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



    பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் 2019 கோடை காலத்தில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டேப்லெட்டில் முந்தைய ஐபேட் மினி மாடலை விட மேம்பட்ட பிராசஸர் மற்றும் சற்றே குறைந்த விலையிலான டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம்.

    முன்னதாக 2015 செப்டம்பரில் ஆப்பிள் வெளியிட்ட ஐபேட் மினி் மாடலில் 7.9 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாம் தலைமுறை ஏ8 சிப்செட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    சமீபத்தில் வெளியான தகவல்களில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் மேம்பட்ட மாடல் 10 இன்ச் அளவில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. 

    புதிய ஐபேட் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், வரும் மாதங்களில் ஐபேட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபேட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம்.
    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய புதிய ஐபேட் மினி மற்றும் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadmini5 #Apple



    ஆப்பிள் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்கள் இருவித வெர்ஷன்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

    ஐபேட்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபேட் மினி 5 சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதற்கென அதிகளவு ஐபேட் மினி சாதனங்களின் உற்பத்தி டிசம்பர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுதிறது.



    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தனது சிறிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்யவில்லை. ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்த தகவல்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஐபேட் மினி, குறைந்த விலை டிஸ்ப்ளே பேனலுடன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்திருந்தார்.
     
    ஆறாம் தலைமுறை 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக ஆப்பிள் புதிய என்ட்ரி லெவல் ஐபேட் மாடலை அறிமுகம் செய்யலாம். இந்த ஐபேட் மாடலில் 10-இன்ச் டிஸ்ப்ளே மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இரு விலை குறைந்த ஐபேட் மாடல்களை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபேட்களின் உற்பத்தி கட்டணத்தை குறைக்கும் நோக்கில் அந்நிறுவனம் கொரியாவில் தயாரிக்கப்படும் எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை புதிய சாதனங்களில் வழங்கலாம் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதள வெர்ஷன் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

    புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான க்ரூப் ஃபேஸ்டைம் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை பல வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டிருந்ததாக அறிவித்தது.

    ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தை அப்டேட் செய்த ஐ.ஓ.எஸ். பயனர்கள் அதிகபட்சம் 32 பேருடன் ஒரே சமயத்தில் ஃபேஸ்டைம் மூலம் பேச முடியும். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.



    1 -  ஃபேஸ்டைம் ஆப் சென்று வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் ADD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - மேல்புறம் இருக்கும் ஆப்ஷனில் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களின் பெயர் அல்லது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும்.

    3 - இங்கு Add Contact ஆப்ஷனை கிளிக் செய்தும் கான்ட்க்ட் ஆப் மூலம் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களை தேர்வு செய்யலாம்.

    4 - வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் அல்லது ஆடியோ ஐகானை கிளிக் செய்து ஃபேஸ்டைம் ஆடியோ கால் மேற்கொள்ள முடியும்.



    க்ரூப் மெசேஜஸ் உரையாடல்களில் இருந்தும் க்ரூப் ஃபேஸ்டைம் கால் துவங்கலாம். மெசஞ்சரில் சாட் செய்யும் நபருடன் அப்படியே கால் செய்து பேச முடியும்.

    1 - சாட் ஸ்கிரீனில் ப்ரோஃபைல் புகைப்படம் அல்லது மை அக்கவுன்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் உரையாடல்களின் மேல்பக்கம் இடம்பெற்றிருக்கும்.

    2 - ஃபேஸ்டைம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் ஃபேஸ்டைம் கால் செய்யும் போது பயனர்கள் இடையே மற்றொரு நபரையும் சேர்க்க முடியும். இதை செய்ய:

    1 - ஸ்கிரீனினை கிளிக் செய்து Moreஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - இனி Add Person ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    3 - அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆப்பிள் ஐ.டி. அல்லது போன் நம்பர் போன்றவற்றில் ஒன்றை பதிவிட வேண்டும்.

    4 - அல்லது Add பட்டன் கிளிக் செய்து மற்றவர்களை கான்டாக்ட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம்.

    5 - இறுதியில் ஃபேஸ்டைமில் அந்த நபரை சேர்க்கலாம்.

    க்ரூப் ஃபேஸ்டைம் மேற்கொள்ளும் போது யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால், உங்களுக்கு சைலன்ட் நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வரும். கால் ஆக்டிவாக இருக்கும் போது நோட்டிஃபிகேஷனை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் உரையாடலில் இணைந்து கொள்ளலாம்.

    குறிப்பு:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 12.1 குறிப்பில் க்ரூப் ஃபேஸ்டைம் வீடியோ கால்கள் ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 4 மற்றும் 6ம் தலைமுறை ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரும் நிகழ்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எதிர்பார்க்கப்படும் சாதனங்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent

     

    ஆப்பிள் நிறுவனம் 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மிகப்பெரும் நிகழ்வினை அக்டோபர் 30ம் தேதி நடத்த இருக்கிறது. இரண்டாவது விழா நியூ யார்க் நகரின் புரூக்லின் அகாடமியில் நடைபெற இருக்கிறது.

    கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS  மேக்ஸ், ஐபோன் XR மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்தது. 

    இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஏற்பாடு செய்திருக்கும் புதிய விழாவின் தீம் “மேக்கிங்” என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் தொழில் செய்வோருக்கு ஏற்ற புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய சாதனங்கள் வெறும் ஐபோன் மட்டுமின்றி அன்றாட தொழில் செய்வோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடலில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம், யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்துடன் விலை குறைந்த மேக்புக் மற்றும் புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்பிள் மேக் மினி 2014ம் ஆண்டில் இருந்து அப்டேட் செய்யப்படவில்லை. இத்துடன் வேகமான இன்டெல் பிராசஸர்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஐமேக், ஐமேக் ப்ரோ மற்றும் 12-இன்ச் மேக்புக் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் இயங்குதளங்களில் ஆப் உருவாக்குவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    க்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

    - ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.

    - க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.

    - செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.

    - இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.

    - பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.


    கோப்பு படம்

    புதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.
    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் நிறுவன சாதனங்களை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை சலுகை வழங்குகின்றன.
    புதுடெல்லி:

    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன.

    அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் பேக்புக் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இன்று (ஜூன் 11) துவங்கும் இந்த சலுகை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்டி கார்ப்பரேட் கார்டுகளை தவிர இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தி இந்த சலுகையை பெற முடியும்.

    கேஷ்பேக் சலுகை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையை (EMI) தேர்வு செய்தாலும் பெற முடியும். கேஷ்பேக் தொகை பரிமாற்றம் செய்தது முதல் 90 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.10,000 கேஷ்பேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்கள், அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    கேஷ்பேக் சலுகையை சேர்த்தால் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் விலை ரூ.67,200, ஐந்தாம் தலைமுறை என்ட்ரி லெவல் ஐபேட் விலை ரூ.23,000-க்கு பெற முடியும். இதே போன்று ஆப்பிள் வாட்ச் 1 சாதனத்தை ரூ.18,950, ஆப்பிள் பென்சில் ரூ.6,600 விலையில் வாங்கிட முடியும்.

    புதிய சலுகை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான பரிமாற்றங்கள் ப்ளூடஸ் / பைன் லேப்ஸ் பிஓஎஸ் டெர்மினல்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துடன் மற்ற சிட்டிபேங்க் சலுகைகளை சேர்க்க முடியாது.
    ×