என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » smartlite
நீங்கள் தேடியது "SmartLite"
நோபிள் ஸ்கியோடோ எனும் டி.வி. பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #SmartLite
இந்தியாவில் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சந்தை சமீப காலங்களில் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. சந்தையில் களமிறங்கும் புதிய டி.வி. பிராண்டுகள் தங்களது தொலைகாட்சி மாடல்களின் விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் டி.வி. பிராண்டு நோபிள் ஸ்கியோடோ. இந்தியாவில் ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்திருக்கும் இந்த பிராண்டு தனது 24-இன்ச் மாடலின் விலையை ரூ.6,999 என்றும் 32-இன்ச் மாடலின் விலையை ரூ.8,999 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.
புதிய டி.வி.க்களின் குறைவான கட்டணத்திலேயே ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, விநியோகம் மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய டி.வி.க்களில் வைபை, லேண் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் யூடியூப், மிராகாஸ்ட், வெப் பிரவுசர் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் டி.வி.யில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.
ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி. 24 இன்ச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்களில் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் 20 வாட் சவுண்ட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகின்றன.
புதிய டி.வி.க்கள் இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பயனர்கள் இவற்றை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும். இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த டி.வி.க்கள் மாசு மூலம் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய டி.வி.க்கள் குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக பேக்லிட் செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வு மற்றும் சியோமி போன்ற பிராண்டுகள் தங்களது குறைந்த விலை டி.வி.க்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் நிலையில், நோபிள் ஸ்கியோடோ மற்றும் ஷின்கோ போன்ற பிராண்டுகள் தங்களது புதிய டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றன. முன்னதாக ஷின்கோ நிறுவனம் 39-இன்ச் டி.வி.யினை ரூ.13,990 விலையில் அறிமுகம் செய்தது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X