என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sn krishna
நீங்கள் தேடியது "SN Krishna"
மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவை ஆதரித்து பிரசாரம் செய்வதாக எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்தார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna
பெங்களூரு :
நடிகர் அம்பரீஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரியாக இருந்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றியவர். அவரது மனைவி நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டார்.
ஆனால் கூட்டணியில் மாண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் சுமலதாவுக்கு டிக்கெட் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இதையடுத்து மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
சுமலதாவுக்கு காங்கிரஸ் அதிருப்தி ஓட்டுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு பா.ஜனதாவில் சேர்ந்து போட்டியிட அழைப்பு வந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் நடிகை சுமலதா நேரில் சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரம் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேசிய சுமலதா, “நான் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். மாண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். அம்பரீசின் ரசிகர்கள் தான் எனக்கு ஆதரவு. நீங்கள் மாண்டியா தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, “நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக என்னால் இயன்ற பங்கை அளிக்க முயற்சி செய்கிறேன். மாண்டியாவுக்கு வந்து உங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். எனது ஆதரவாளர்களும் உங்களுக்கு ஆதரவு திரட்டுவார்கள். மாண்டியா மாவட்டம், ஜனதா தளம்(எஸ்) மயமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அங்கு களம் காண்கிறீர்கள். வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். அம்பரீஷ் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மனது வைத்தால், தேர்தல் முடிவை மாற்ற முடியும்” என்றார். SumalathaAmbareesh #MandyaConstituency #SNKrishna

×

X