என் மலர்
நீங்கள் தேடியது "Soban Babu"
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் நிலையில், சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #JayalalithaaBiopic
தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.
கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சர்ச்சையான வேடம் என்பதால் இந்த வேடத்தில் நடிக்க நடிகைகள் யோசித்தனர். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JayalalithaaBiopic #GauthamMenon #RamyaKrishnan #VijiChandrasekar