என் மலர்
நீங்கள் தேடியது "Sochi"
ரஷியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் மோடி சோச்சி நகரில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இந்தியாவுக்கு புறப்பட்டார். #ModiInRussia
மாஸ்கோ:
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதமர் மோடி ரஷியா சென்றார். சோச்சி நகரில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த மோடியை, புதின் கைக்குலுக்கி கட்டியணைத்து வரவேற்றார். இதனை அடுத்து, இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தனர்.
“இந்த பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்ததற்கு அதிபர் புதினுக்கு நன்றி. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் விஷயத்தில் ரஷியா முக்கிய பங்களித்து வருகிறது. பிரிக்ஸ் மற்றும் ஐஎன்எஸ்டிசி அமைப்புகள் மூலம் இரு நாடுகளும் ஒன்றினைந்து பணியாற்றுவோம்” என பேச்சுவார்த்தையின் போது மோடி கூறினார்.

இதையடுத்து, புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார். சோச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடியை, ரஷிய அதிபர் புதின் நேரில் வந்து கட்டியணைத்து, கை குலுக்கி வழியனுப்பி வைத்தார். #ModiInRussia