search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son wedding"

    மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    மும்பை:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.



    இதையொட்டி, பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் என முக்கிய விருந்தினர்கள் குவிந்துள்ளனர்.

    ஐ.நா. சபை முன்னாள் பொது செயலாளர் பான் கி மூன், அவர்து மனைவி யோ சூன் டீக், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவரது மனைவி செர்ரி பிளேர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர்.


     
    பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வருகை தந்தனர்.



    இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே உள்பட பலரும் வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்தனர். #MukeshAmbani #AkashAmbani #ShlokaMehta
    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்த முடிவு செய்துள்ளார். #IAS #BasanthKumar
    ஐதராபாத்:

    ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமார்.

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு கவர்னர் நரசிம்மனுக்கு இணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

    தற்போது பசந்த்குமார் விசாகப்பட்டினம் மண்டல மேம்பாட்டு ஆணையத்தில் ஆணையராக இருக்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஆடம்பர செலவு செய்வதை தவிர்க்க முடிவு செய்த பசந்த்குமார் மிக மிக எளிமையாக மகள் திருமணத்தை நடத்தினார்.

    அந்த திருமணத்திற்கு அவர் செலவிட்ட மொத்த தொகையே ரூ.16 ஆயிரம் தான்.



    இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். வருகிற 10-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தையும் மிக மிக எளிதாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

    திருமண அழைப்பிதழ், உடை மற்றும் விருந்தாளிக்கு உணவு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவிட அவர் ஏற்பாடு செய்துள்ளார். அதுபோல மணமகள் குடும்பத்தினரிடமும் ரூ.18 ஆயிரத்திற்குள் அனைத்து செலவுகளையும் முடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதன் மூலம் அவரது மகன் திருமணம் ரூ.18 ஆயிரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதுபற்றி அறிந்ததும் கவர்னர் நரசிம்மன் தொலைபேசி மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமாரை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். #IAS #BasanthKumar
    ×