search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonali Bendre"

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரே, வாழ்க்கையில் இனி பயமே இல்லை என்று கூறியிருக்கிறார். #SonaliBendre
    தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து இருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் சொல்கிறார்:-

    புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.



    அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்த வடுக்கள் உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன்.

    கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வந்து விட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய் விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை.” இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறினார்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சோனாலி பிந்த்ரே சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார். #SonaliBendre
    தமிழில் பம்பாய், காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இயக்குனரும், தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை மணந்த இவருக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.

    திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய சோனாலி பிந்த்ரே, கடந்த ஜூலை மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

    புற்றுநோய்க்காக சோனாலி பிந்த்ரே நியூயார்க்கில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சோனாலி பிந்த்ரே இன்று மும்பை திரும்பினார்.



    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோல்டி பெல், “சோனாலி பிந்த்ரே நன்கு உடல் நலம் தேறி வந்து கொண்டிருக்கிறார். இனி மேற்கொண்டு சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல வேண்டியதில்லை. வழக்கமான பரிசோதனைகள் மட்டும் செய்துகொண்டால் போதும். உங்கள் அனைவரது ஆதரவுக்கு மிக்க நன்றி. அவர் மிகவும், உறுதியான, திடமான பெண். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார். #SonaliBendre

    புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வரும் சோனாலி பிந்த்ரே, கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre
    காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழில் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.

    கடந்த 2002-ல் இயக்குனரும், தயாரிப்பாளருமான கோடி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் தங்கி அதற்கான சிகிச்சைகளையும் எடுத்து வருகிறார். இதற்காக தலைமுடியை எடுத்து மொட்டை தலையில் இருப்பதுபோன்ற படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அழுதபடி உருக்கமாக பேசிய வீடியோவையும் தலையில் விக் வைத்த படத்தையும் வெளியிட்டார். 

    அந்த படத்தின் கீழ், ‘‘நமது தோற்றம் அழகாக இருப்பது முக்கியம். அழகாக இருக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும். அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியாக இருப்பதற்கான வி‌ஷயங்களை செய்ய வேண்டும். தனது தோற்றம் பற்றிய கர்வம் இருப்பது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது’’ என்று கூறி இருந்தார். 



    தற்போது கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். ‘‘கீமோ தெரபி சிகிச்சையால் எனது கண்களில் வித்தியாசமான அறிகுறைகளை பார்த்தேன். சில நேரம் என்னால் படிக்க முடியாமல் போனது. இதனால் பயந்தேன். இப்போது சரியாகி விட்டது’’ என்று கூறியுள்ளார். #SonaliBendre

    மான்வேட்டை வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட நட்சத்திரங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் 1998ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.



    கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், நடிகை சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கீழ்கோர்ட்டில் விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #BlackBuckPoachingCase #SonaliBendre
    தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு புற்றுநோய் இருப்பதை தயங்கி தயங்கி தனது மகனிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre
    தமிழில் பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே.

    திரைப்பட இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்ட இவர், 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனாலி பிந்த்ரே தற்போது நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சோனாலி அவரது சமூக வலைதள பக்கத்தில், தனது மகன் ரன்வீருடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எனது மகன் ரன்வீர், வலிமை மற்றும் நல்ல விசயத்திற்கான அடிப்படையாக இருக்கிறான் என தெரிவித்துள்ளார்.

    அவன் 12 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 8 நாட்களுக்கு முன் பிறந்தது, எனது மனதில் ஆச்சரியத்தினை நிறைத்தது. அதில் இருந்து அவனது மகிழ்ச்சி மற்றும் நலம் ஆகியவையே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாக இருந்தது.



    புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது குறித்து, அதனை அவனிடம் சொல்வதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. அவனை பாதுகாக்க நாங்கள் அதிகம் விரும்பினோம். அவனிடம் அனைத்து உண்மைகளையும் கூறுவது அவசியம் என அறிந்திருந்தோம். எப்பொழுதும் திறந்த மனதுடன் மற்றும் நேர்மையுடனேயே நடந்து கொண்டோம். அவன் இந்த விசயத்தினை பக்குவமுடன் எடுத்து கொண்டான்.

    எனக்கு வலிமையாகவும், நல்ல விசயத்திற்கான அடிப்படையாகவும் ஆகிவிட்டான். அவன் கோடை விடுமுறையில் இருக்கிறான்.  அவனுடன் நான் நேரம் செலவிட்டு வருகிறேன். நாங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் வலிமையை பெற்று கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். #SonaliBendre

    தமிழில் குணால் ஜோடியாக காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre
    பாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து சோனாலி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது, 

    உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். 
    43 வயதாகும் சோனாலி பிந்த்ரே தமிழில் `பாம்பே' படத்தில் அறிமுகமாகி, `காதலர் தினம்' படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #SonaliBendre
    ×