என் மலர்
நீங்கள் தேடியது "song"
- பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.
- இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை
எஞ்சாய் எஞ்சாமி எனும் பாடல் மார்ட் 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியானது.இந்த பாட்டை பாடியவர் 'அறிவு' மற்றும் 'தீ'. பாடகி தீ- க்கு இதுவே முதல் பாடல் ஆகும். சந்தோஷ் நாராயணன் தான் இப்பாடலிற்க்கு இசையமைத்தார்.
இப்பாடல் மாஜா என்னும் ம்யூசிக் லேபல் தயாரித்தது.
பாடல் வெளியாகி சில நாட்களில் பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்பாடலுக்கான யு ட்யூப் வீடியோ இதுவரைக்கும் 449 மில்லியன் வியூஸ்களையும், 4.8 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது.

இந்தப் பாடல் தமிழ் பாடலை உலகளவிற்க்கு கொண்டு புகழ் வர செய்தது. இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டு முடிவடைந்த நிலையில் .அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார் அதில் அவர் "இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை , இந்த பாடலுக்கான வருமானம் எல்லாம் அந்த பாடல் தயார் செய்த ம்யூசிக் தயாரிப்பாளர்களுக்கே செல்கிறது . நான் இது வரைக்கும் எந்த வலைதளங்களிலும் இதை பற்றி பேசியதில்லை. இதை பற்றி இப்பொழுது பேச தோன்றியது அதனால் கூறுகிறேன் . இப்பதிவினை முடிந்த அளவுக்கு அனைவருக்க்கும் பகிர செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தனி இசைக் கலைஞர்களுக்கு கூடுதல் வெளிப்படை தன்மையாக இயங்கும் தளங்கள் தேவை அதனால் நான் ஒரு ம்யூசிக் ஸ்டூடியோ ஒன்று தொடங்குவேன் .
தனி இசைக் கலைஞர்கள் இதனால் கவலை பட வேண்டாம் உங்களை வந்து சேர வேண்டியது கண்டிப்பாக வந்து சேரும்" என்று அவரின் ஆதங்கத்தை அதில் பதிவிட்டுள்ளார்.
- ஷ்வேதா மோகன் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு புதிய பாடலை அவரே இசையமைத்து,பாடி உள்ளார்.
- இப்பாடலை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
பின்னணி பாடகி ஷ்வேதா மோகன் மிகவும் பிரபலமான ஒரு பாடகி. இவரை நாம் அனைவரும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்ச்சியின் நடுவராக பார்த்திருக்கிறோம். சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் இவர் பாடிய "வா வாத்தி" எனும் பாடல் மிகவும் ஹிட்டானது.
அதை தொடர்ந்து இப்பொழுது ஷ்வேதா மோகன் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு புதிய பாடலை அவரே இசையமைத்து,பாடி உள்ளார். இப்பாடலுக்கு 'பெண் - ஆந்தம்' என்று பெயர் வைத்துள்ளனர்.
பெண்களின் சிறப்பை போற்றும் இப்பாடலை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். " இந்த மகளிர் தினத்திற்க்கு சிறந்த சமர்ப்பணமாக இப்பாடல் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
- ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த மகளிருக்கான விருது வழங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது :-
கடந்த 2013-ஆம் ஆண்டு கபடி போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்றேன். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதால் கபடி விளையாட்டை தொடராமல் விட்டு விட்டேன். தொலைக்காட்சியில் கூட விளையாட்டை
பார்க்க மாட்டேன்., எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். 2019- ல் வெளிவந்த 'பிகில்' படத்தை ஒரு தியேட்டரில் பார்த்த போது ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.
அந்த பாடல் வரிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மீண்டும் கபடி விளையாட்டுக்கு சென்று சாதிக்க வேண்டும்., எனது திறமைகளை கபடி உலகில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.
அதனை எனது கணவர், மாமியாரிடம் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதன் மூலம் மகளிர் கபடி குழுவினருக்கு பயிற்சியளித்து வருகிறேன்.
எனது பயிற்சி மூலம் மகளிர் கபடி குழுவுக்கு பல பரிசுகள் கிடைத்தன. இதற்கு காரணம் 'சிங்கப்பெண்ணே' பாடல் தான். அந்த பாடல் எனக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது. இந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிக்க நன்றி. இந்த தகவல் ஏ.ஆர் ரகுமானை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பார்த்தஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா.. நீங்கள் உயர்வடைந்து கொண்டே இருங்கள் என அவர் பதிலளித்து உள்ளார்.
Thank you for your kind words Kavitha ..keep rising?????? https://t.co/G1s5xu86RO
— A.R.Rahman (@arrahman) March 11, 2024
- சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
- இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது
ஆஸ்கார் விருதுகள் -2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.
பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் நாட்டு.. நாட்டு... பாடல் ஒளிபரப்பாகி ஆஸ்கார் விழாவை சிறப்பித்தது. ஏற்கனவே 2023- ம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
இதன் மூலம் இந்திய பாடலுக்கு பெருமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆண்டும் ஆஸ்கார் விழாவில் இந்த பாடல் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது.
தற்போது இது தொடர்பான 'வீடியோ 'எக்ஸ்' இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது.
- படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில் , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று பாடல் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
- படத்தின் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது பாடலின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்
- ’விசில் போடு’ என பாட்டிற்கு தலைப்பு வைத்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் 'THE GOAT' படத்தின் முதல் பாடலுக்கு நீங்கள் தயாரா? என்று நேற்று பதிவிட்டார்.
படத்தின் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் தற்பொழுது பாடலின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். 'விசில் போடு' என பாட்டிற்கு தலைப்பு வைத்துள்ளனர்.
வெங்கட் பிரபு அவரின் எக்ஸ் பக்கத்தில் "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நம்ம தளபதிக்கு விசில் போடு" என பாட்டின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அப்போஸ்டரில் விஜய் ஒரு விசிலை ஊதியபடி காணப்படுகிறார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் குரலில், மதன் கார்கி வரிகளில் 'The GOAT' படத்தின் விசில் போடு பாடம் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அரண்மனை திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற ப்ரோமோ பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகியது.
தமிழ் சினிமாவில் பேய் திரைப்படம் என்றால் நமக்கு நியாபகம் வருவது அரண்மனை தான். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை பாகம் 1- 2014 ஆம் ஆண்டிலும் , பாகம் 2 - 2016 ஆம் ஆண்டில் வெளியாகியது.
பிறகு 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரையிலர் வெளியானது. இதுவரை அரண்மனை 4 படத்தின் டிரெயிலர் 1 கோடி பார்வைகள் யூடியூபில் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற ப்ரோமோ பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகியது. பாடலில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் மிக கவர்ச்சியான உடையில் நடனமாடி இருக்கின்றனர். அரண்மனை4 படத்தின் சில காட்சிகளும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
அரண்மனை திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே தற்பொழுது இந்த பாடல் மிக வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார்.
- அவரின் 50 வது படமான ’ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என தனுஷ் பன்முகத்தன்மையுடையவர். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.
இந்நிலையில் ராயன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி படத்தின் முதல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடுவதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றை எக்ஸ் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அதில் தனுஷ், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நின்றுக் கொண்டு இருக்கின்றனர். இப்பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாடலின் தலைப்பான விசில் போடு தலைப்பை இன்று காலையில் வெளியிட்டனர் படக்குழுவினர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.
இந்நிலையில் பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.
பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது. தமிழ் புத்தாண்டின் கொண்டாட்டம் இப்பாடலின் மூலம் ரசிகர்களிடையே இரட்டிப்பாகியிருக்கிறது.
இப்பாடலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல்.
- கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் தற்பொழுது " தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.
"பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.
பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.
பாடல் வெளியாகி 19 மணி நேரம் கடந்த நிலையில் இது வரை 19 மில்லியன் பார்வையையும் 1.15 மில்லியன் லைக்சுகளையும் யூடியூபில் பெற்றுள்ளது.

பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல். தற்பொழுது விசில் போடு பாடல் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரபிக் குத்து பாடலின் வியூசை இது தாண்டி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.
- நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.
"பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.
பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.
நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. தெனிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" இருந்தது. தற்போது அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடித்து கோட் படத்தின் விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது.
இதன் மூலம் அவர் பட பாடலின் சாதனையை அவரே அடுத்தப்பட பாடலின் மூலம் முறியடித்து இருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடலான விண்டேஜ் லவ் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 12 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அடுத்த பாடலான 'மெலடி' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடலின் வரிகளை படத்தின் இயக்குனரான இளன் எழுதியுள்ளார்.
படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.