search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonia Agarwal"

    • ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் "சீரன்".
    • வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் "சீரன்". சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர்.

    நடிகை இனியா பேசியதாவது..

    சீரன் டிரெய்லர் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.ப்படத்தில் பூங்கோதை எனும் பாத்திரத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறேன். 20 வயது பெண், இரண்டு குழந்தைகளின் அம்மா, அப்புறம் 56 வயதுப்பெண் என, மூன்று கெட்டப். உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.

    இயக்குநர் துரை K முருகன் பேசியதாவது…

    இயக்குநர் ராஜேஷ் எம் சார், அவர் என்னைச் சேர்த்துக் கொண்டதால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன் நன்றி சார். இனியா மேடம் மூன்று லுக்கில் அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சசி அவர். செண்ட்ராயன் என் நண்பன், சின்ன பாத்திரம் எனக்காக நடித்துள்ளார்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
    • லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்

    ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.

    இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

    ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.

    ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

     

    லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.

     

    அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது.

     

    அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத்,ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.

    இந்தப் படத்தின் முன்னோட்டமாக டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

    • 'புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
    • செல்வராகவன் "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இதையடுத்து சமீபத்தில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வந்தனர்.


    இந்நிலையில் 'புதுப்பேட்டை 2' திரைப்படத்தில் நடிக்க நடிகை சோனியா அகர்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சோனியா அகர்வால், "கண்டிப்பாக புதுப்பேட்டை-2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பேன். நடிப்பு என்னுடைய தொழில். செல்வாக்கூட சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இதுவரை 'புதுப்பேட்டை 2' படத்தில் நடிக்கவேண்டும் என்று எந்த அழைப்பும் வரவில்லை. யார் யார் இதுல நடிக்க போகிறார்கள் என்றும் எனக்கு தெரியாது" என்றார்.

    தமிழில் பல படங்களில் நடித்த சோனியா அகர்வால், 36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என்று வேதனையாக கூறியிருக்கிறார்.
    காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார்.

    மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சோனியா அகர்வாலுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில் வெளியான அயோக்யா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து சென்றார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறேன். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர். சிலர் என்னை மும்பைக்கே திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றனர்.



    நான் முதன்மை வேடத்தில் நடித்த ‘தனிமை’ என்ற படம் வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் அனுபவம் வாய்ந்தவர். இருந்தாலும் அந்த படத்தில் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. ஆனால் படத்தின் சிக்கல்களுக்கு நானும் காரணம் என்று கிளப்பிவிட்டார்கள். ‘தனிமை’ நல்ல தரமான கதையம்சம் உள்ள படம்.

    இதுபோன்ற கதைகள் எனக்கு அதிகம் வருவதில்லை. எனக்கு இப்போது 36 வயது ஆகிறது. ஒரு பையனுக்கோ சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் இயக்குனர்கள் என்னை என் வயதையொத்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.

    ‘தடம்’ படத்தில் அருண் விஜய்யின் சிறுவயது அம்மாவாக நடித்தேன். அதற்கே முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. கதையை முழுமையாக கேட்டபிறகு என் வேடத்துக்கான முக்கியத்துவம் கருதி ஒப்புக் கொண்டேன். அயோக்யா விஷாலின் படம். என்னுடைய படம் அல்ல. எனவே ஒரு காட்சியில் வந்து சென்றேன்’.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’. 

    இதில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். சோனியா அகர்வால், யோகி பாபு, பெஃப்சி விஜயன், மீரா கதிரவன், சாம்ஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - எஸ்.கோபிநாத், இசை - அருண்ராஜ், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் - ஏக்நாத், மதன் கார்க்கி, ஒலிப்பதிவாளர் - டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன்.எஸ், ஒலிக்கலவை - கருண் பிரசாத், ரெஞ்ஜித் வேணுகோபால், கலை - ஏ.அமரன், சண்டை - அன்பறிவ், ஸ்டண்ட் சில்வா, எழுத்து, இயக்கம் - மகிழ் திருமேனி



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.

    நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார். 

    படம் மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep #SmruthiVenkat

    தடம் டிரைலர்:

    ×