என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sooriyan"

    • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
    • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

    நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

    1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

    2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

    3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

    4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

    5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

    6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

    7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

    8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

    9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    நவக்கிரகங்கள் - சூரியன்

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு,

    பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்குக் கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், சாரதரிடம் மன்னிப்புக் கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்குச் சூரிய புராணத்தை உரைத்தார்.

    அதனைக் கேட்டு அவன் நோய் நீங்கியதாகப் புராணம் கூறும்.

    வடநாட்டில் "முல்தானத்தில்" உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பெற்றது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் "திருக்கண்டியூர்" மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் உள்ள"பனையபுரம்" ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி, அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள "ஆதித்யபுரம், கும்பகோணம் கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் "சூரியமூலை" ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் சூரியனை வழிபட ஏற்ற தலங்கலாகும்.

    • ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.
    • "ஆடி செவ்வாய் தேடிக் குளி" என்பது பழமொழி.

    தமிழ் வருடங்கள் 60, தமிழ் மாதங்கள் 12.

    இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

    பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு.

    தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிகள் உள்ளன.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது.

    அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

    இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும்.

    காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    "ஆடி செவ்வாய் தேடிக் குளி" என்பது பழமொழி.

    அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால்,

    பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும்.

    ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    • ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.
    • 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும்.

    இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

    அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது.

    புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம்.

    திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

    ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.

    விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள்.

    'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.

    அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது.

    பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

    பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

    இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான்.
    • கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர்.

    தை முதல் ஆனி வரை உத்தராயனம்.

    இதுவே தேவர்களின் பகல் காலமாகும்.

    ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம்.

    இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும்.

    நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான்.

    ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

    வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.

    கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை.

    இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள், ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி,

    ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    • ஆடி சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
    • ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.,

    ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.

    அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு,

    பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்;

    தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

    (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை).

    இதை இன்னமும் பின்பற்றுகின்றனர்.

    இதனால் "ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    • “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்’ என்பார்கள்.
    • இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது.

    திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும்.

    சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.

    குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும்.

    அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும்.

    இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

    "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்"

    போன்ற பல்வேறு பழமொழிகளும் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்குகின்றன.

    • சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம்.
    • உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்.

    விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

    சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம்.

    ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா.

    இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும்.

    அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும்.

    வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார்.

    இதுதான் செருப்படித் திருவிழாவாகும்.

    உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள்.

    இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா.

    இப்படி பல விழாக்கள் வித விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

    • அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.
    • ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள்.

    திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து,

    பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

    மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார்கள்.

    அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.

    கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

    நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர்.

    தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும்.

    பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம்.

    ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

    மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள்.

    நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வர்.

    ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள்.

    கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும்.

    அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து, வரும் பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

    • அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.
    • ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

    ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும், மற்ற தமிழகப் பகுதிகளில் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

    செஞ்சிக் கோட்டையருகேயுள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் பெரிய அளவில் விழா நடைபெறும்.

    அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.

    அன்று மாலை அம்மன் புற்றுக் கோவிலிலிருந்து புறப்பட்டு திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்று மாலை அம்மன் பூங்கரக வடிவில் உலா வருவாள்.

    ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

    அருகேயுள்ள பெரிய சடையம்மன் ஆலயத்திலும் சின்ன சடையம்மன் ஆலயத்திலும்,

    பக்தர்கள் வேல் குத்தியும் எலுமிச்சைப் பழங்களை ஊசியில் குத்தியும் பிரார்த்தனை நிறைவேற்றுவர்.

    ×