என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soundarraja"

    • தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா.
    • மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார்.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார்.

     

    இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார்.

     

    சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ் நாடகத் தந்தை மற்றும் தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாக கொண்டு 63 நாடகங்களை மேடையில் அரங்கேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதுவையில் உயிரிழந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நெல் ஜெயராமன் மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், விஷால், சௌந்தர்ராஜா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Neljayaraman #RIPNelJayaraman
    திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 50. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி கூறும்போது, இயற்கை வேளாண் பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என்றார்.



    நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.

    நடிகர் விஷால், 

    நெல் ஜெயராமன் ஐயாவின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. விவசாயத்தில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு இளைஞர்கள் விவசாயம் செய்ய முக்கிய காரணியாக அவர் இருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    நடிகர் சசிகுமார்,

    நெல் மணி நமக்கு உயிர் கொடுக்க.. அந்த நெல் மணிக்கே புத்துயிர் கொடுத்தவர் நெல் ஜெயராமன் அவர்கள். இயற்கையைப் போற்றிய அவரை நாம் என்றென்றும் போற்றுவோம்,பாரம்பரிய  விதைகளைக் காப்போம்.

    நடிகர் செளந்தர்ராஜா,

    விவசாயிகளும், விவசாயமும் அழிந்து கொண்டுக்கிருக்கும் இந்த மோசமான நிலையில், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற தெய்வங்களின் மறைவு மிக பெரிய சோகம். இளையஞர்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்களின் அறிவுரைகளை பரப்ப வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். முடிந்தால் அனைவரும் விவசாயம் பண்ண வேண்டும். இவரது ஆத்மா சாந்தி அடைய விவசாயத்தை காப்போம். மண்ணை நேசிப்போம். மக்களை நேசிப்போம்.

    இவ்வாறு கூறியுள்ளனர். #Neljayaraman #RIPNeljayaraman

    `சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் சௌந்தரராஜாவுக்கும், தொழிலதிபர் தமன்னாவுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. #SoundaraRaja #Tamanna
    `சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. பின்னர் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ஜிகர்தண்டா', `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', `தங்கரதம்', `தர்மதுரை', `ஒரு கனவு போல', `திருட்டுப்பயலே 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

    மேலும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ஈடிலி', `கடைக்குட்டி சிங்கம்' படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும்  சௌந்ததராஜாவுக்கும், க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும் மதுரை அருகே உசிலம்பட்டியில் வைத்து திருமணம் நடந்தது.



    திருமணமத்தில் குடும்பத்தினர், சொந்த பந்தங்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  #SoundaraRaja #Tamanna

    ×