என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "South African president"
- முதல் உச்சி மாநாடு 2009ல் ரஷியாவில் நடைபெற்றது
- 5 நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல் கடினம் என்கிறார் பேராசிரியர்
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பாக 2009-இல் பிரிக்ஸ் (BRICS) உருவானது.
இதன் முதல் உச்சி மாநாடு 2009-இல் ரஷியாவில் நடைபெற்றது.
2023 ஆகஸ்ட் 22-ம் தொடங்கி இன்றுடன் 3-வது மற்றும் நிறைவு நாளாக இந்த அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகென்னஸ்பர்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
2024-இல் அர்ஜென்டினா, எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைய போகின்றன.
இது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும் போது,"கூட்டமைப்பின் விரிவாக்கம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்," என தெரிவித்துள்ளார்.
"இது ஒரு மிக பெரிய தருணம். வளர்ச்சிக்கான ஒரு உலக கட்டமைப்பை உருவாக்க எத்தியோப்பியா துணை நிற்கும்" என புதிதாக இணையவுள்ள எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது கூறியுள்ளார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் எகிப்து ஆகியவை இணைவதன் மூலம் 'மெனா' எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க (MENA) நாடுகளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
ரஷியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகளால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் நலனை கருத்தில் கொண்டு அவை இந்த விரிவாக்கத்திற்கு பெரிதும் முனைந்துள்ளன.
"5 பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல் கடினம் என்பதால் இந்த கூட்டமைப்பு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் வகையில் எதையும் சாதிக்கவில்லை. எனவே இதன் விரிவாக்கம் மேலும் இப்பிரச்சனையை சிக்கலாக்கலாம். இருந்தாலும் அது இணைந்து கொள்ளும் நாடுகளின் கையில் உள்ளது" என தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக பேராசிரியர் டேனி பிராட்லோ தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ம் ஆண்டு முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அவ்வகையில் மே 8-ம் தேதி பொதுத்தேர்தல் (தேசிய சபை தேர்தல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் நடைமுறைகள் தொடங்கின.
தற்போதைய அதிபரும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராமபோசா, மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலகியதைத் தொடர்ந்து, ராமபோசா அதிபர் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. #SouthAfricaElection #CyrilRamaphosa
இந்திய குடியரசு தின விழா மற்றும் காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்கிறார். அர்ஜென்டினாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்க அதிபரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘தென்ஆப்பிரிக்க அதிபரை சந்தித்தது மகிழ்ச்சி. குடியரசு தின விழா மற்றும் காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் அவரை வரவேற்கிறோம். அவரது வருகையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #India #RepublicDay2019 #Modi #Ramaphosa
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்