என் மலர்
நீங்கள் தேடியது "soya plant"
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தொட்டிக்கு பதிலாக தனது உடலில் சோயா பீன்ஸ் செடியுடன் சுற்றித்திரிந்த எலி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போபால்:
இயற்கையின் உருவாக்கத்தில் ஒவ்வொரு உயிர்களும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் ஒரு தனித்துவம் பெற்றுள்ளன. சில சமயங்களில் படைப்பின் குணத்தையும் மீறி சில அதிசயங்கள் நடந்து விடுகின்றன. மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங், தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை சமீபத்தில் விதைத்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது பயிர்களை பார்க்கச்சென்ற அவர் வியப்பின் உச்சிக்கே சென்றுள்ளார். செடியை உடலில் தாங்கிய எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியுள்ளது. எலியின் கழுத்துப்பகுதியில் சோயா செடி இலைகளுடன் சிறிய அளவில் வளர்ந்திருந்தது.
தனது செல்போனில் தாதர் சிங் வீடியோ எடுத்துள்ளார். உயிரியல் வினோதமாக இது இருந்தாலும் அந்த எலி வலியுடன் சுற்றித்திரிந்ததை அவர் உணர்ந்துள்ளார். பின்னர், எலியை தனது வீட்டுக்கு கொண்டு சென்ற அவர், செடியை பிடுங்கியுள்ளார்.
கழுத்துப்பகுதியில் காயம் இருந்த போது விதைகள் அதில் விழுந்து செடி வளர்ந்து இருக்கும். இது ஒரு உயிரியல் அதிசயம், கழுத்தில் செடி இருந்தாலும் அதன் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அங்குள்ள கல்லூரி ஒன்றின் உயிரியல் துறை தலைவர் கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க..