search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special children"

    • 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • சிறப்பு குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்க ஆர்வம்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து எஸ்.டி.ஏ.டி. அமைப்பின் சார்பில் 15 சிறப்பு குழந்தைகள் கின்னஸ் உலக சாதனைக்காக சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ நீந்தி செல்கின்றனர்.

    இன்று (5-ந்தேதி) தொடங்கி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் (காலை 6 மணி முதல் மாலை 6 வரை) நீந்தி ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இன்று காலை இதற்கான தொடக்க விழா மண்டபத்தில் நடந்தது. மண்டபம் பேரூராட்சி சேர்மன் ராஜா குடியரசைக்கு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 15 சிறப்பு குழந்தைகளும் கடலில் இறங்கி நீந்த தொடங்கினர்.

    இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சிராஜுதீன், குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் அன்பழகனார் கூறுகையில், கின்னஸ் சாதனைக்காக 15 சிறப்பு குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

    கடலில் நீந்தும் குழந்தைகளுக்காக 5 படகுகள் பாதுகாப்பாக செல்லும். அவர்களுடன் 8 பயிற்சியாளர்கள் செல்வார்கள். 11 நாட்கள் கடலில் நீந்தும் குழந்தைகள் வருகிற 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்வார்கள் என்று கூறினார்.

    • புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சமூக மனநலம் மற்றும் பராமரிப்பாளர்களின் பிரச்சினையை புரிந்து கொள்வது குறித்த தன்னார்வர்களுக்கான பயிற்சி நடைப்பெற்றது.
    • மனநலம் பாதிக்கபட்டவர்களை பராமரிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சமூக மனநலம் மற்றும் பராமரிப்பாளர்களின் பிரச்சினையை புரிந்து கொள்வது குறித்த தன்னார்வர்களுக்கான பயிற்சி நடைப்பெற்றது. திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 48 ஊராட்சி மற்றும 3 பேரூராட்சிகள் உள்ளிட்ட 51 பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கபட்டவர்களை பராமரிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதற்கான தொடக்க விழாவில் கிராம பெண்கள் மேம்பாட்டு அமைப்பு இயக்குநர் தாஸ், நடேஷ், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், பயிற்சியாளர்கள் திருவள்ளுர் சூசைராஜ், புதுக்கோட்டை பேராசிரியர் சலோமி சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை சுருங்கிவிட்டது.
    • குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள்

    திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என பல பெண்கள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே தங்களின் வாழ்க்கையை சுருக்கிக்கொள்கிறார்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரும்பி பார்க்கும் போதுதான், தாங்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதற்கும், சமூகத்துக்காக பங்களிப்பதற்குமான தேவைகள் இருப்பதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்ந்து திருமணம் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் சாதனா தர்மராஜ், அவருடன் ஒரு சந்திப்பு.

    நான் சிவகாசியில் வசித்து வருகிறேன். கல்லூரிப் படிப்பை முடிந்தவுடன் எனக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஒரு கட்டத்தில். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சற்று சிந்தித்துப் பார்த்தேன். அப்போதுதான் நமக்கான அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

    எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்துவது, பள்ளிகளில் ஊக்கமளிக்கும் பயிற்சி பட்டறைகள் நடத்துவது என குழந்தைகள் தொடர்பான பணிகளை செய்து வந்தேன். அந்த சமயத்தில்தான், ஒருநாள் என் நண்பர்களுடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர் காப்பகத்திற்கு சென்றேன்.

    அங்கு எனது கண்முன்னே ஒரு சிறுவனுக்கு வலிப்பு வந்து, என் மடியில் வந்து விழுந்தான். அந்த சம்பவத்திற்கு பிறகுதான் சிறப்பு குழந்தைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அவர்களுக்கான சிகிச்சைகள் பற்றி எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன.

    இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது `சிவகாசியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை' என்றார்கள். இந்த குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்தேன்.

    அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் அனைத்தையும் நேரடி மற்றும் இணைய வகுப்புகள் மூலமாக கற்றறிந்தேன். தற்போது இந்த துறையில் மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில் பேசுவதில் பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும் அந்த குறையாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். இது சற்றே சவாலான காரியம் தான்.

    ஆனால் பயிற்சிக்குப் பிறகு அந்த குழந்தைகளின் வளச்சியையும், அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது அந்த சால்கள் ஒரு பொருட்டாகவே தோன்றாது. குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள் இந்த அன்புதான் என்னை தொடர்த்து புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது. எனது செயப்பாடுகளுக்காக புதுமைப்பெண் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளேன்" என்றார்.

    ×