search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special yagam"

    • சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சாமி தரிசனம்.
    • துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

    அப்போது கோவிலில் உள்ள துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினர். தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், குருபகவான் சன்னதியில் வழிபட்டும், சத்ரு சம்ஹார யாகம் வளர்த்தும் சுவாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சியின் போது பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் முருகன், நகரத் தலைவர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.
    • நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் போதிய மழை இல்லாததால் உடன்குடி வட்டாரங்களில் குளங்கள் வரண்டு காணப்படுகின்றன.கிணறுகளில் வெகுவாக தண்ணீர் குறைந்து வருகிறது. மேலும் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது

    எனவே மாநிலம் முழுவதும் நல்ல பருவ மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு யாகம் செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஷ்டா மரிய தங்கம் தலைமையில், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளைகள் செயலாளர் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவனடியார் சிவமுருகன், காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாலகிருஷ்ணன், தொழில் அதிபர் நோவா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் காளத்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது.
    • பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் 64 வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது. பக்தர்களின் வாழ்வில் மனக்குறை கள், கடன்தொல்லைகள் நீங்கிடவும், பருவ மழை பெய்திட வேண்டியும் சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. பின்னர் பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், சந்தனம், திருநீறு, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சித்திபேட் மாவட்டம் ஏராவல்லி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் சத்ரு வேத பரஸ்பர மகாருத்ர சகஸ்ர சண்டியாகம் நடத்தி வருகிறார். #ChandrasekaraRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் அம்மாநிலத்தின் வளமைக்காகவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பிரம்மாண்டமான யாகங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

    அவ்வகையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சித்திபேட் மாவட்டம் ஏராவல்லி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் சத்ரு வேத பரஸ்பர மகாருத்ர சகஸ்ர சண்டியாகம் நடத்தி வருகிறார். இந்த சிறப்பு யாகத்தை
    100-க்கும் மேற்பட்ட பண்டிதர்கள் நடத்தி வருகிறார்கள்.

    5 நாட்கள் நடைபெறும் இந்த யாகத்தில் 2-ம் நாளான நேற்று மகா ஆரத்தி, மந்தரபுஷ்பம் ஆகிய நிகழ்ச்சியில் சந்திர சேகரராவ் , அவரது மனைவி ஷோபாராவ் கலந்து கொண்டனர். #ChandrasekaraRao
    நெல்லையப்பர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றத. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    உலக நன்மைக்காகவும், சமுதாயத்தில் நல்லிணக்கம் ஓங்கி மக்கள் சகோதர உணர்வுடன் வாழவும், நெல்லையப்பர் கோவிலில் நேற்று மகா மிருத்யூஞ்சய மந்திர சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சன்னதி முன்பு கணபதி ஹோமத்துடன் மகா மிருத்யூஞ்சய மந்திரவேள்வி பூஜை நடந்தது. அப்போது கும்ப பூஜையும், யாகசாலை பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து காலை 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டு இருந்த கும்பங்களில் இருந்த புனிதநீரால் நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த சிறப்பு வேள்வி பூஜையில் சாரதா கல்லூரி நிர்வாகி பக்தானந்தா மகாராஜ் சுவாமிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் பக்தர் பேரவையினர் செய்து இருந்தனர். 
    ×