என் மலர்
நீங்கள் தேடியது "spouse visa"
பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை பெண்ணின் துணைக்கு ஹாங்காங் அரசு விசா மறுத்து வந்த நிலையில், துணை விசா வழங்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #HongKong #QT
சென்ட்ரல்:
பிரிட்டனை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஜோடி க்யூ.டி என்று பெயரின் முதல் எழுத்தால் குறிப்பிடப்பட்டனர். 2011-ம் ஆண்டு முதல் இந்த ஜோடி சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2014-ம் ஆண்டில் டி என்பவருக்கு ஹாங்காங்கில் பணி கிடைத்துள்ளது. ஆனால், அவரது வாழ்க்கைத்துணையான க்யூவுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.
துணை விசா என்பது வாழ்க்கைத்துணைவிக்கு வழங்கப்படும் விசா ஆகும். இதன் மூலம் ஒரே விசாவில் தம்பதிகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், க்யூடி தம்பதிக்கு இந்த விசா மறுக்கப்பட்டது. அரசின் உத்தரவுக்கு எதிராக கீழ்கோர்ட்டில் இந்த ஜோடி வழக்கு தொடர்ந்தனர்.
தீர்ப்பு க்யூதம்பதிக்கு சாதகமாக வந்தாலும், அரசு அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மூன்றாண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. க்யூடி ஜோடிக்கு துணை விசா வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோல்ட்மேன் சாச்ஸ், மோர்கன் ஸ்டான்லே போன்ற பல நிறுவனங்கள் இந்த ஜோடிக்கு ஆதரவாக இருந்தது. ஆண், பெண் என்ற பாகுபாடு பார்ப்பது ஹாங்காங்கில் சட்டவிரோதம் என்றாலும், அங்கு ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி இல்லை.
ஹாங்காங்கிற்கு செல்லலாமா? என்பதைத் தீர்மானிக்கும் நபர்களிடம், சார்ந்திருக்கும் திறனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருத வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.