என் மலர்
நீங்கள் தேடியது "SR Prabhakaran"
- "செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
- இந்த இணையத் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் செங்களம். இதில் கலையரசன், வாணி போஜன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள், பிரேம், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார்.

செங்களம்
இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் சூர்யகலாவாக வாணி போஜனும், ராயராக கலையரசனும், கணேஷமூர்த்தி எம்எல்ஏ-வாக வேல ராமமூர்த்தியும், ராஜமாணிக்கமாக பிரேமும், வீராவாக டேனியலும் நடித்துள்ளனர்.

செங்களம்
"செங்களம்" இணையத் தொடர் கடந்த மார்ச் 24ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இந்த செங்களம் தொடர் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இணையத்தொடரை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
- இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தந்தை உயிரிழப்பு.
- இவரது உடல் அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தந்தை சூலி ராமு( 23:12:2023) இன்று நற்பகல் 2 மணியளவில் மதுரையில் காலமானார் இவருக்கு வயது 74. மதுரை அருகே உள்ள அவரது பூர்வீகமான ஒத்தவீடு கிராமத்தில் நாளை (24:12:2023) பகல் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் மற்றும் கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஆர். பிரபாகாரன். இவர் கடைசியாக இயக்கி ஒ.டி.டி. தளத்தில் வெளியான "செங்கலம்" இணைய தொடர் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இந்த படத்தின் பின்னணி இசையை தரண்குமார் அமைக்கிறார்.
- இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது.
எஸ்ஆர் பிரபாகரன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் புதிய படம் றெக்கை முளைத்தேன். எஸ்ஆர் பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள றெக்கை முளைத்தேன் படத்திற்கு யுஏ சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தை தயாரித்ததோடு, எஸ்ஆர் பிரபாகரனே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்க்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்ற பிரிவு அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
இவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இந்த படத்தின் பின்னணி இசையை தரண்குமார் அமைக்க பாடல்களுக்கு தீசன் இசையமைக்ககிறார்.
கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவில், பிஜு டான் போஸ்கோ படதொகுப்பு செய்ய, கார்த்திக்துரை நிர்வாக தயாரிப்பு பணிகளை செய்துள்ளனர். இந்த படத்தை A.முனிஸ்வர், K.தீரா இணைந்து தயாரித்துள்ளனர். "றெக்கை முளைத்தேன்" திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

