என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sri Lanka President"
லண்டன்:
இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.
கோத்தபய ராஜபக்சே கொலை குற்றவாளி என விமர்சிக்கும் விளம்பர பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் கிளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. கோத்தபய ராஜபக்சே செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதுவரை யாரும் பொறுப்பேற்காத இந்த தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உள்பட 290 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 24 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.
இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்றைய தாக்குதல்கள் உள்நாட்டினரால் நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ரஜிதா சேனரத்னே இன்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என இலங்கை அரசின் உளவுத்துறை கடந்த 11-ம் தேதி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். #SriLankaPresident #SriLankablasts #SriLankaEasterattacks
கொழும்பு:
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.
இவருக்கு போதிய மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.
அதன் காரணமாக இலங்கையில் 2 மாதங்களாக அரசியலில் ஸ்திரமற்ற தன்மை நிலவியது.
இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக தக்ஷிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை தேவையின்றி பதவி நீக்கம் செய்து நாட்டில் 2 மாதங்களாக அதிபர் சிறிசேனா குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். எனவே அவரது மனநிலையை பரிசோதித்து உடல்நிலையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு கூறியது. மேலும் வழக்கு செலவுக்காக தக்ஷிலா வக்மாலி ஜெயவர்த்தனே ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #Sirisena
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டதுடன், அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் முட்டுக்கட்டை போட்டது.
புதிய மந்திரி சபையில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் முக்கிய எம்.பி.க்களான மங்கள சமரவீராவுக்கு நிதித்துறையும், சகல ரத்னாயகவுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் அதிகாரமிக்க துறையாக கருதப்படும் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் துறையை ரணில் பரிந்துரைத்தவர்களுக்கு வழங்காத அதிபர் சிறிசேனா, மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் அந்த துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். இதன் மூலம் அதிபர், பிரதமர் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. #SriLankaCabinet #Sirisena
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார்.
ஆனால் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. பின்னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்களில் ராஜபக்சே தோல்வியை தழுவினார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. சிறிசேனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு மதிப்பீடுகளுக்கு இடையிலான மோதலே காரணம் என சிறிசேனா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு கூறாத அவர், வெளிநாட்டு சக்திகள் தன்னை அச்சுறுத்துவதாகவும் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வெளிநாட்டு சக்திகளுக்கு இடம் கொடுக்காமலும், வெளிநாட்டு அச்சுறுத்தல்களை புறந்தள்ளியும் தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் நான் செயல்படும்போது, வெளிநாட்டு சக்திகள் ஒரு சவாலாக உருவெடுத்து அச்சுறுத்துகின்றன. பழைய ஏகாதிபத்தியத்தின் நிழல்கள் நமது வழியில் குறுக்கிடுகின்றன.
இலங்கையின் புவியியல் சார்ந்த முக்கியத்துவம் அல்லது உலக வரைபடத்தில் இலங்கையின் அமைவிடம் மீது உலக வல்லரசுகள் கொண்டிருக்கும் நாட்டமே தற்போதைய குழப்பங்களுக்கு காரணம். வெளிநாட்டு சக்திகளின் எண்ணங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும், உள்நாட்டு மதிப்பீடுகளை மதிப்பவர்களுக்கும் இடையிலான மோதல் பிரச்சினை ஆகும்.
இவ்வாறு சிறிசேனா கூறினார்.
முன்னதாக நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வழக்கு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு வழங்கினாலும், தாய்நாட்டின் நலன் கருதி அதை செயல்படுத்துவேன். இதில் எந்த ஒரு தனிநபர் அல்லது கட்சியின் நலனை கருத்தில் கொள்ளமாட்டேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டார். புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவரால் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப் படுவதாகவும், ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால் அதற்கு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்து நிறைவேற்றினார். அதை ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அதிபர் சிறிசேனாவும் ஏற்கவில்லை. இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவா? அல்லது ராஜபக்சேவா? என்ற குழப்பம் நீடித்தது.
இதற்கிடையே பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிபர் சிறிசேனா சம்மதித்தார். இதையடுத்து நேற்று பாராளுமன்றம் கூடியது. அப்போதும் ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி தூவியும், நாற்காலிகளை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.
ஆனாலும் கடும் அமளிக்கு இடையே சபையை நடத்திய சபாநாயகர் கரு.ஜெயசூரியா, ராஜபக்சே அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பாக நடத்தினார். இதில் 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கிடையே 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியையும் அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த லட்சுமண்யபா அபய் வர்தனே கூறும்போது, “அதிபர் சிறிசேனா 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்கவில்லை. அதை அவர் நிராகரித்து உள்ளார்” என்றார். ஆனால் இது தொடர்பாக சிறிசேனா அலுவலகத்தில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, “எங்களிடம் மெஜாரிட்டி உள்ளது. எங்களது அரசை நாங்கள் அமைப்போம். சட்டப்படி நாங்கள் செயல்படுவோம்” என்றார்.
இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்