என் மலர்
நீங்கள் தேடியது "srireddy"
- அவதூறு வீடியோக்கள் தொடர்பாக ஆந்திர போலீசார் ஸ்ரீரெட்டி மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை.
பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, நடிகர்களும்-இயக்குனர்களும் தனக்கு பட வாய்ப்பு தருவதாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்ததும், அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் பரபரப்பானது.
மேலும் அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீதும் அவதூறாக பேசி வீடியோக்கள் வெளியிட்டார்.
சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாகவும், பவன் கல்யாண் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான அவதூறு வீடியோக்கள் தொடர்பாக ஆந்திர போலீசார் ஸ்ரீரெட்டி மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் அவர் கைதாகலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திராபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "நான் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இனிமேல் போலீஸ் வழக்கு, கைது என்று மானத்தை வாங்காதே என்று குடும்பத்தினர் கெஞ்சுகிறார்கள். இனிமேல் உங்களை பற்றி அவதூறாக பேசமாட்டேன்'' என்று வீடியோவில் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மீ டூ’ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த், டுவிட்டரில் பதில் அளித்தார்.
அதில் “மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார். வெறுப்பாளர்களும், சின்ன மனதுக்காரர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் எனக்கு இப்போது புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானது. போலித்தனமானது. கூடவே பெண் வெறுப்புத்தன்மையுடையது என்று கூறினார்.
சித்தார்த்தின் கண்டனத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார். ‘‘இன்று சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது உங்கள் குரல்வளை எங்கிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மீது தனது மகளை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்த தந்தை கொல்லப்பட்டார். அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. எல்லா கற்களும், அம்புகளும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்?” என கேட்டுள்ளார். #Seeman #Siddharth








