என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srushti Dange"

    • பிரபுதேவாவின் பிரமாண்டமான நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது.
    • பிப்ரவரி 22-ம் தேதி சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    சென்னை:

    இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    இந்த நடன நிகழ்ச்சி பிப்ரவரி 22-ம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.

    ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது.


    இந்த நடன நிகழ்ச்சியில் நடிகை சிருஷ்டி டாங்கே உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தற்போது பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். மரியாதை இல்லாத இடத்தில் தன்னால் வேலை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

    பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படம் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. #Kathir #Sathru
    ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகு குமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’. இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். 

    மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவீன் நஞ்சுண்டான் இயக்கி இருக்கிறார்.



    இப்படம் குறித்து இயக்குனர் நவீன் நஞ்சுண்டான் கூறும்போது, ‘இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இதன் கதை. விறுவிறுப்பான திரைக்கதை, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த படம் இது. இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் ஜி.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். 

    வெற்றி படங்களான மரகத நாணயம், ராட்சசன் என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு, சத்ரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு. இப்படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது’ என்றார். #Kathir #Sathru
    இயக்குநர் சேரன் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், அவர் நடித்துள்ள புதிய படமொன்றில் 3 நாயகிகள் சேரனுக்கு செக் வைக்கின்றனர். #RajavukkuCheck #Cheran
    இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என திரையுலகுக்கு திரும்பியிருக்கிறார். ஒருபக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் ஏற்கனவே ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கியவர். ‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகை சேர்ந்த சராயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.



    சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். #RajavukkuCheck #Cheran

    மேகா படம் மூலம் புகழ் பெற்ற நடிகை சிருஷ்டி டாங்கே தற்போது ஸ்ரீமணி இயக்கத்தில் விஜய் சந்தோஷ் நடிப்பில் உருவாகும் ‘அர்ஜுனா’ படத்தில் நடிக்க இருக்கிறார். #SrushtiDange
    ஸ்பைஸி கிளவுட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் ‘அர்ஜுனா’. இயக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத்துவக்க விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி எடிட்டிங் பணியை மேற்கொள்ள நிர்மல் இசையமைக்கிறார்.



    இந்த படத்துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு “கிளாப்” அடித்து துவங்கி வைத்து, படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.
    எம்.நாகராஜன் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன் - தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாகி இருக்கும் `காலக்கூத்து' படத்தின் விமர்சனம். #Kaalakkoothu
    பிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே காதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை மறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார். 

    ஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம் தவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு அவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் கவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.



    மற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன் திருமணம் செய்துக் கொள்கிறார். கோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

    இறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன், தன்ஷிகா இருவரும் தப்பித்தார்களா? கவுன்சிலர் மகனிடம் இருந்து பிரசன்னா தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா, சோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால், இவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.

    மற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்‌ஷன், ரொமன்ஸ் என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    முதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும், மதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். இரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து சென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது போல் தோன்றுகிறது.



    மதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக வேகம் எடுத்திருக்கிறது. பழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி இருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது பலவீனம். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘காலக்கூத்து’ ஆடியிருக்கலாம். #Kaalakkoothu #KaalakkoothuReview #Prasanna #Kalayarasan

    ×