என் மலர்
நீங்கள் தேடியது "ssmb28"
- அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படம் ஜனவரி 13, 2024 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக எஸ்எஸ்எம்பி28 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) தயாரிக்கிறார். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

எஸ்எஸ்எம்பி28
குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்த என்டர்டெய்னர் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 13, 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.