என் மலர்
நீங்கள் தேடியது "Starship Rocket"
- நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மனிதா்கள் மற்றும் பொருள்களை அனுப்பும் நோக்கில் ஸ்டாா்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- ராக்கெட்டின் பலகட்ட சோதனைகளில் வெற்றி, தோல்வி இரண்டையும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
விண்வெளிக்கு மனிதா்களை அழைத்து செல்லக்கூடிய, மீண்டும் பயன்படுத்தத்தக்க ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட 'ஸ்டாா்ஷிப்' ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் சோதனை தோல்வி அடைந்தது.
அமெரிக்க தொழில் அதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாா்ஷிப் ராக்கெட், இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் பிரமாண்டமான, அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட் ஆகும்.
சுமாா் 400 அடி நீளம் கொண்ட இதுதான் மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். அதிக உந்து திறன் கொண்ட முதல் நிலை, மனிதர்களையோ, பிற பொருட்களையோ ஏற்றிக்கொண்டு விண்வெளியில் உலா வரும் இரண்டாவது நிலை என்று இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் ஏவப்பட்டால் 150 டன் வரையும், ஒருமுறை பயன்படுத்தினால் போதும் என்றால் 250 டன் வரையும் எடையை சுமந்து செல்லக்கூடிய இந்த ராக்கெட், முதல்முறையாக திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது.
சோதனை முறையில் செலுத்தப்படுவதால் அதில் மனிதா்களோ, செயற்கை கோள்களோ ஏற்றப்படவில்லை. இந்தச் சூழலில், முதல் நிலை உந்து பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அந்த சோதனை திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மிகவும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய அந்த சோதனை செயல்படுத்தப்பட்டது. எனினும், விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த ராக்கெட் வெடித்துச் சிதறி ஹவாய் தீவு அருகே உள்ள பசிபிக் கடல் பகுதியில் விழுந்தது.
இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், ஸ்டார் ஷிப்பை ஏவி சோதித்ததில் ஏராளமான விவரங்களைத் தெரிந்து கொண்டதாகவும், இன்னும் சில மாதங்களில் மீண்டும் அந்த ராக்கெட்டை ஏவி சோதிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மனிதா்கள் மற்றும் பொருள்களை அனுப்பும் நோக்கில் ஸ்டாா்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே, இந்த ராக்கெட்டின் பலகட்ட சோதனைகளில் வெற்றி, தோல்வி இரண்டையும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
- 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது.
- பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.
உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் "சூப்பர் ஹெவி" எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது.
33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது. இந்த ராக்கெட் சோதனை இரண்டு முறை தோல்வியில் முடிந்தது. அதில் ஏற்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட்டன.
இந்த நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதை நேரலையில் 35 லட்சம் பேர் பார்த்தனர். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்தது. பின்னர் பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் மீண்டும் வளி மண்டலத்தில் நுழைந்த போது ராக்கெட் திடீரென்று தொடர்பை இழந்தது. இறுதி இலக்கை அடைவதற்கு முன்பே தொடர்பை இழந்தது. கீழ்-நிலை பூஸ்டர் வெற்றிகரமாக நீரில் தரையிறங்குவதில் தோல்வி்யடைந்தது.
இருந்தபோதிலும் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப்பின் மூன்றாவது ஏவுகணை சோதனையில் அதன் பல நோக்கங்களை பூர்த்தி செய்ய முடிந்ததாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
- ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.
- 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.
ஸ்பேஸ் எக்ஸ்ன், ஸ்டார்ஷிப் பிளைட்5 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு, அதை ஏவுவதற்கு பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ், இன்று தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது.
இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது.
ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.
வலைதளங்களில் பலரும் இதன் வீடியோவை பகிர்ந்து "என்னால் இதை நம்பவே முடியவில்லை" என ஆச்சரியத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
- டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும்.
- ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனது டெஸ்லா காரை பேட்டரிகள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும்.
உலகம் முழுவதும் இந்த டெஸ்லா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தற்போது தண்ணீர் மூலம் கார் என்ஜின்கள் தயாரிக்கும் பணியினை அவரது நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் மனித சிந்தனைகளை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் மனித மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்து வருகிறார். அதன் ஆரம்பகட்ட பரிசோதனை வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.
அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசாவிற்கு இணையாக விண்ணில் ராக்கெட்டுகள் மற்றும் சாட்டிலைட்டுகளை செலுத்தி வருகிறது. அவரது சாட்டிலைட் மூலம் உலகின் எந்த பகுதியிலும் இணையதள வசதிகளை பெற முடியும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க், டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு அதிக நன்கொடையும் வழங்கினார். அதற்கு பிரதிபலனாக எலான் மஸ்க்-கிற்கு டிரம்ப் ஆட்சியில் சிறப்பு திறன் துறை என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்திற்கு லோகோ வடிவமைப்பு செய்த டெஸ்லா என்ஜினீயர் அலெக்ஸ் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் நியூயார்க் நகரில் காலை 6.30 மணிக்கு பயணிகள் ஒரு கப்பலில் ஏறுகின்றனர். அந்த கப்பல் அவர்களை அழைத்து கொண்டு கடலில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு வருகிறது. பின்னர் பயணிகள் ராக்கெட்டில் ஏற்றப்பட்டு, விண்ணில் புறப்படுகின்றனர். அந்த ராக்கெட் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து ஷாங்காய் நகரை 39 நிமிடத்தில் அடைந்து விடுகிறது.
அந்த வீடியோவில் இந்த ராக்கெட் மூலம் பயணம் செய்தால் ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே எவ்வளவு மணிக்குள் சென்றுவிடலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பல நகரங்களுக்கான பயண நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
தற்போது டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும். ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும். இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் எலான் மஸ்க், "இது இப்போது சாத்தியம்" என பதில் அளித்துள்ளார்.
அவரின் எதிர்கால திட்டத்திற்கான முன்னோட்டம் தான் இந்த வீடியோ வெளியீடு என்று எக்ஸ் பக்கத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.