search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steel Pickling Units"

    குடியிருப்பு பகுதிகளில் இயங்கிவரும் ஸ்டீல் மெருகு பட்டறைகளை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #NGTfines #Delhigovt #steelpicklingunits
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் பல குடியிருப்பு பகுதிகளின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களில் உள்ள கரைகளை நீக்கி முலாம் பூசும் மெருகு பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டறைகள் வெளியேற்றும் கழிவுகளால் யமுனை நதியின் நீர் மாசடைந்து வருகிறது.

    குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறிய வகையில் வசிர்புர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் இந்த பட்டறைகளின் மீது நடவடிக்கை எடுத்து மூடுமாறு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு உத்தரவிடக்கோரி ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.



    இந்த வழக்கை விசாரித்துவந்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்துவரும் டெல்லி அரசுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால், சூற்றுச்சூழல் தொடர்ந்து மாசடைந்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய டெல்லி அரசுக்கு 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும், இதுபோல் இயங்கிவரும் அனைத்து பட்டறைகளையும் உடனடியாக மூடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். #NGTfines #Delhigovt  #steelpicklingunits

    ×