search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stent"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.
    • இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. பல இளம் வயது நபர்கள் இதில் பலியாகின்றனர். இக்கால வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும், மன அழுத்தம், சமூதாய சூழல் மற்றும் பல காரணங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

    பெரும்பாலும் ஒருவரின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள், அவர்களுக்கு முதலில் செய்யும் ஒரு சிகிச்சை ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி. இதில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்த இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதில் ஸ்டெண்ட் வைத்து அந்த அடைப்பை அகற்றுவர். இதில் இரத்த குழாயில் எந்தளவுக்கு அடைப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் சதவீத அளவை கணக்கிடுவர்.

    இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பொதுவாக 100 சதவீத அடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர்பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நிலையை புரட்டிப் போடும் வகையில், மருத்துவர்கள் ஒரு மனம் நெகிழும் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

    இதயத்தின் பெரிய இரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட 58 வயதான வழக்கறிஞர் எம்.ஸ்டாலின் மணி என்பவரை மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர். இதற்காக அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்தக்குழாயில் "ஸ்டென்ட்" பொருத்தி அடைப்பை சரி செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.

    பூரண குணமடைந்ததிற்கு பின் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் , மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிந்து நன்றி தெரிவித்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூட செய்யத் தயங்கும் அறுவை சிகிச்சையை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து நடத்தி வெற்றி பெற்று இருப்பது பாராட்டை குவித்து வருகிறது.

    மேலும், இதுபோன்ற செயல்கள் நடக்கும் போது அரசு மருத்துவனை மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    ×