என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » stephen constantine
நீங்கள் தேடியது "Stephen Constantine"
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோல்வி கண்டு வெளியேறியதை தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்துள்ளார். #StephenConstantine
ஷார்ஜா:
17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பக்ரைன் அணி வீரர் ஜமால் ரஷித் வெற்றிக்கான கோலை அடித்தார்.
முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்று இருந்தது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி அடைந்தது. 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததும், இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளரான 56 வயது ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடைசி லீக் ஆட்டம் முடிந்ததுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து நான் விலகி விட்டேன். நான் இந்திய அணியினருடன் கடந்த 4 வருடங்களாக இருந்து வருகிறேன். எனது நோக்கம் இந்திய அணியை ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற வைப்பது தான். அதனை நான் செய்து காட்டினேன். மேலும் சில சாதனைகளை நாங்கள் படைத்தோம். வீரர்கள் அனைவரும் எனக்கு அளித்த ஒத்துழைப்பை நினைத்து பெருமை அடைகிறேன். எனது சுழற்சி முடிந்து விட்டது. அணியில் இருந்து விடைபெறுவதற்கு இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது வருத்தம் அளிக்கிறது. இனிமேல் எனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2-வது முறையாக 2015-ம் ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஸ்டீவன் கான்ஸ்டன்டைனின் பதவி காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிய இருந்தது. கான்ஸ்டன்டைன் பயிற்சியில் இந்திய அணி தரவரிசையில் 96-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியை கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிப்பதாகவும் அகில இந்திய கால்பந்து சங்க பொதுச்செயலாளர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார். #StephenConstantine

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் அடுத்த மாதம் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க அனுமதி அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #WeAreIndia #BackTheBlue #StephenConstantine #IndiaFootball
மும்பை:
2018-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது. இதில் 40 விதமான விளையாட்டுகளை சேர்ந்த 462 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி தடகளம், ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம், வில் வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணியை விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எங்களுக்கு நிறைய போட்டிகள் தேவைப்படுகிறது. ஒருவேளை அரசு கவனித்தால் எங்களை ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி வையுங்கள். அது 23 வயதிற்குட்பட்டோருக்கான போட்டி. நமது அணியில் 23 வயதிற்குட்பட்டவர்கள் 11 பேர் உள்ளனர். அந்த வீரர்கள் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் நாம் அதிக பலன்கள் பெறலாம்.
போட்டியை காண வாருங்கள் என மக்களிடம் நாம் பிச்சை எடுப்பது போல் கேட்க கூடாது. இன்று (திங்கள்கிழமை) கிடைத்த வரவேற்பு நான் எதிர்பார்த்தைவிட மிகவும் அதிகம். அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அதே ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் கூறியுள்ளார். #WeAreIndia #BackTheBlue #StephenConstantine #IndiaFootball
×

X