search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stopover"

    • ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது.
    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அயோத்திக்கு முக்கிய நகரங்களில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது. இந்த இடைநில்லா விமானங்கள், வாரத்தில் மூன்று முறை இயக்கப்பட்டன.

    இந்நிலையில், ஐதராபாத்- அயோத்தி நேரடி விமான சேவையை கடந்த 1-ம் தேதியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. டிக்கெட் விற்பனை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

    தென்னிந்தியாவின் பரபரப்பான தொழில்நுட்ப மையமான ஹைதராபாத்தை வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான அயோத்தியுடன் இணைக்கும் விமான சேவையை நிறுவனம் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பாதையில் செயல்பாடுகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இப்போது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஐதராபாத்தில் இருந்து அயோத்தி செல்ல வேண்டுமானால், ஐதராபாத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.

    இதற்கு முன்பு, சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கான நேரடி விமான சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைக்கு, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நேரடி விமானங்கள் செல்கின்றன.

    • பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது.
    • ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. வருமானம் குறைவாக வந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் விமான சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 3 1/2 மாதங்கள் கழித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் அக்டோபர் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டு வந்தது.

    அதன்படி, தினமும் மதியம் 10.25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. மதியம் 12.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

    மதியம் 2.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு 3.15 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. அதன் பிறகு, மாலை 3.40 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது.

    இந்நிலையில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் செலவை ஈடுசெய்யும் வகையில் கூட டிக்கெட் முன்பதிவாக இல்லை.

    விமானத்தில் உள்ள 78 இருக்கைகளில் போதிய அளவு பயணிகள் இல்லாமல் தினமும் புதுவையில் இருந்து பெங்களூருக்கும். ஹைதராபாத்துக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 31-ந் தேதி முதல் விமான சேவையை முழுமையாக நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதை உறுதி செய்யும் விதமாக வருகிற 31-ந் தேதி முதல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கான விமான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

    ×