என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STR"

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் 90 எம்.எல். படத்தில், அவருக்கு துணிச்சலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார். #90ML #Oviyaa
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் கிடைத்தது. அவர் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ள படம் 90 எம்.எல். இந்த படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் பற்றி படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பிடம் கேட்டபோது,

    ‘இங்கே ஒரு ஆண் நினைப்பதுபோல வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் பெண் அப்படி வளர்வதில்லை.

    ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் பெண்கள் வளர்வதால் பல வி‌ஷயங்களை வெளியே அவர்களும் சொல்வதில்லை. அந்த மாதிரி வி‌ஷயங்களை உடைத்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் என்ன நினைக்கிறாங்க? எப்படி வாழணும்னு ஆசைப்படுறாங்க? அவங்களோட நட்பு எப்படி இருக்கணும்? காதல், திருமண வாழ்க்கை உள்ளிட்ட எதிர்பார்ப்பு இதையெல்லாம் கருத்தாக இல்லாமல் வெளிப்படையாக சொல்கிற களம்தான் இந்த ‘90 எம்.எல்’. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். ஆனால் இதுதான் நிஜம். ஓவியா அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக வருகிறார். அதுக்காக எல்லாவற்றுக்கும் சண்டைபோடும் நபர் இல்லை.



    ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மென்ட் வீட்டில் வசிக்கும் 4 பெண்களை அவர் சந்திக்கிறார். தினம் தினம் தங்களுடைய எண்ணங்களை அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று ஒவ்வொருவரும் பகிர்கிறார்கள். படம் முழுக்க காமெடி, துணிச்சல், சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள்கூட இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார். #90ML #Oviyaa #AnitaUdeep #STR

    கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு வெளியிட்ட வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

    சிம்பு தனது ரசிகர்களிடம் ’இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இது சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் ‘சிம்புவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா, விளம்பரத்துக்காகத்தான் இதை அவர் செய்கிறார் எனவும் விமர்சித்தார்கள். இதனால் கோபமான சிம்பு ‘என் கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள்’ என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சையானது. இதுபற்றி பால் முகவர் சங்கத்தினர் கமி‌ஷனரிடம் புகார் கொடுக்கும் வரை சென்றது.

    தேனாம்பேட்டை குடிசை பகுதியை சேர்ந்த மதன் என்ற சிம்பு ரசிகர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு சிம்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் படம் வைரல் ஆனது. அந்த ரசிகரின் வீட்டுக்கு இன்று வந்த சிம்பு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு உடைகள் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.



    அப்போது ‘கட்அவுட் வைக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையால் என் ரசிகர் பலியானதால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். அது எல்லோரையும் சென்று சேரவில்லை. சிலர் விமர்சித்ததற்கு பதிலடியாக எதிர்மறையாக சில வி‌ஷயங்கள் கூறினேன். அது எல்லோரையும் சென்று சேர்ந்து சர்ச்சையாகிவிட்டது.

    பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டாவில் பால் காய்ச்சி ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றி பேசவில்லை. எல்லோரையும் மாற்றுவதற்காக பேசுகிறேன்.

    இப்போதும் சொல்கிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள். வாய் இல்லாத கட் அவுட்டுக்கு ஊற்றுவதற்கு பதிலாக படம் பார்க்க வரும் வாய் உள்ள மனிதர்களுக்கு ஊற்றிக் கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கூற்றை மதிப்பவன் நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை’.

    இவ்வாறு அவர் கூறினார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven

    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

    இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் இன்று வெளியாகிறது. லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV#MeghaAkash #STRTheKing #SundarCBonanza #VRVHappyFamily #VRVFromFeb1st 

    கேலி, கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இதுவரை செய்யாத அளவில், ‘என் கட்அவுட் வைத்து, அண்டாவில் பால் ஊற்றுங்கள்’ என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

    இந்த படம் பற்றி சிம்பு கடந்த வாரம் ஒரு வீடியோவில் பேசியதாவது:-

    பட வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் எல்லாம் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள்’ என்று கூறி இருந்தார்.

    இந்த வீடியோ பதிவைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினர். இருப்பதே ஒன்று, இரண்டு ரசிகர்கள் தான், இதற்கே இப்படியா என்று கேலி செய்தனர்.

    இதற்கு பதிலடியாக சிம்பு தற்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு வீடியோ வெளியிட்டேன். அதில் என் படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி பார்க்காதீர்கள். கட்அவுட், பேனர் எல்லாம் வைத்து பால் அபிஷேகம் எல்லாம் பண்ணாதீர்கள் என்றேன்.

    சிம்பு பேசிய வீடியோ:


    அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு சட்டை என எடுத்துக் கொடுத்தீர்கள் என்றால் சந்தோ‌ஷப்படுவேன் எனச் சொல்லியிருந்தேன். இவருக்கு எல்லாம் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் இதை விளம்பரத்துக்காகத் தான் சொல்கிறார்கள். எனக்கு இருக்கிறதே 2, 3 ரசிகர்கள் தான் என்கிறார்கள். நாம் ஒரு தப்பு செய்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும்.

    2, 3 ரசிகர்கள் தான் என்னும் போது ஏன் இதெல்லாம் பேச வேண்டும். எனவே அந்த 2, 3 ரசிகர்களுக்கு மட்டும் சொல்கிறேன். இது என்னோட அன்புக் கட்டளை. இதுவரைக்கும் நீங்கள் வைக்காத அளவுக்கு பிளெக்ஸ் வையுங்கள், பேனர் வையுங்கள். கட்அவுட் வையுங்கள். பால் எல்லாம் பாக்கெட்டாக ஊற்றாதீர்கள். அண்டாவில் ஊற்றுங்கள். வேற லெவலில் செய்யுங்கள்.

    இதைத் தான் நான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். எனக்கு தான் 2, 3 ரசிகர்கள் தானே இருக்கிறார்கள். அதனால் இதை செய்வது தப்பு கிடையாது. அந்த அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆளும் கிடையாது. யாரும் கேள்வியும் கேட்கப்போறது கிடையாது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட ரிலீசுக்கு வேற லெவலில் செய்யுங்கள்.

    இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven

    `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ரெட்கார்டு பாடல் மூலம். சினிமாவில் சிம்புவுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்ட சர்ச்சைக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். #VanthaRajavathaanVaruven #STR
    சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து இருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யாகிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரெட்கார்டு எனத் தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுத, சிம்பு பாடியுள்ளார்.



    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில், சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட விவகாரத்தில், சிம்புவுக்கு நடிக்க ‘ரெட் கார்டு’ (தடை) போடப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, இந்த பாடலின் வரிகள் எழுதப்பட்டு இருப்பது, சிம்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV #RedCardu #MeghaAkash

    2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar
    22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
     
    படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.



    வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அக்‌ஷய் குமாரிடம் பேசி வருகிறார்கள். 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வசூல் பார்த்த நிலையில், மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து அக்‌ஷய் இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் முன்னோட்டம். #VanthaRajavathaanVaruven #STR
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

    சிம்பு நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், நடனம் - பிருந்தா, சதீஷ்,  கலை இயக்குநர் - குருராஜ், தயாரிப்பாளர் - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், கதை - திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்:

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Indian2 #KamalHaasan
    22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றுள்ளார்.

    இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். சென்னையின் புறநகர் பகுதியில் பிரம்மாண்ட அரங்குகளுடன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. தொடர்ந்து பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.



    முன்னதாக சமீபத்தில் வெளியாகிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal

    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #VanthaRajavathaanVaruven #RedCardu
    `செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.



    படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘ரெட் கார்டு’ என்ற சிங்கிள் ட்ராக்கை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிம்பு பாடியிருக்கும் இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். #VanthaRajavathaanVaruven #RedCardu
    என்னுடைய படம் வெளியாகும் போது பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
    `செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்துள்ளார்.

    அதில், ``வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1-ந்தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும்.



    அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட்-அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன்.

    எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து சிம்பு வெளியேறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Kamalhaasan #Simbu #STR #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

    22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலுக்கு பேரனாக ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சிம்பு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 



    அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழு அவரிடம் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் தற்போது கூறுகிறார்கள். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கிறது. 2021-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Kamal #Kamalhaasan #Simbu #STR #Shankar #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

    22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது சிம்புவின் கதாபாத்திரம் லீக்காகி உள்ளது.



    இதில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    ×