என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STR"

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9 #RaashiKhanna
    சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவாரத்தை நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9 #RaashiKhanna

    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையில், அவதூறு பரப்பியதாக நடிகர் விஷால் மீது சிம்பு வழக்கு பதிவு செய்த நிலையில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AAA #STR #Vishal
    மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடித்து வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டது. ரூ.1 கோடியே 51 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிம்புவுக்கு பாக்கித் தொகை வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார் செய்தார். அதேபோல, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் செய்தார்.

    இந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிம்புவுக்கு எதிராகவும், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிம்பு குறித்து, அவதூறு செய்தியை விஷால் பரப்பியதாகவும் கூறப்பட்டது.



    இதனால், நடிகர் விஷாலிடம், ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சிம்பு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷாலுக்கு எதிராக நான் செயல்பட்டேன். இந்த பகையை மனதில் வைத்து, இந்த விவகாரத்தில்எனக்கு எதிராக விஷால் செயல்படுகிறார். அவர் உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக அவதூறு பரபரப்பி உள்ளார். எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #AAA #STR #Vishal

    நாம் தமிழர் கட்சி விழா ஒன்றில் பேசிய சீமான், சிம்பு நேர்மையானவர், துணிவானவர், அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று பேசினார். #Seeman #STR
    நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய ‘‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன்தான். அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அவர்தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோர்கிட்டயும் கதை கூறினேன். ஆனால் மற்றவர்கள் பயந்தார்கள். ’நான் நடிக்கிறேன் அண்ணா’ என்று சிம்பு துணிச்சலாக சொன்னார்.



    எனது இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும். படம் முக்கியமான வி‌ஷயங்களை பேசும். சிம்பு நேர்மையானவர், துணிவானவர்.

    இவ்வாறு அவர் பேசினார். #Seeman #STR

    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கிறார்களாம். #Maniratnam
    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார்.

    படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. அடுத்து மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்து இருக்கிறார்.



    கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா என்ற முடிவில் இருக்கிறார்.

    இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லிவிட்டாராம் மணிரத்னம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். #Maniratnam #PonniyinSelvan #AmitabhBachchan #Vikram #JayamRavi #VijaySethupathi #STR #AishwaryaRai

    சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
    `செக்கச்சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே படத்தை பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

    சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தில், பிரபல இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #STR #Simbu
    சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சிம்பு. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், மகத், கேத்தரீன் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி படப்பூஜையுடன் படம் தொடங்கப்படவுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படம். 

    ‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு. இதனை சீமான் அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 



    சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார் சீமான். சிம்பு படத்தின் மூலமாக தற்போது இயக்கத்துக்கு திரும்பியுள்ளார். இந்த படமும் ஒரு அதிரடி அரசியல் கதை தான் என்கிறார்கள்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Indian2 #KamalHaasan
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‌1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக இந்தப் படம் உருவாகியிருந்தது.

    22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமல் - ‌ஷங்கர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

    தனது அரசியல் பணிகளுக்கு இடையே படத்துக்காக உடல் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில் கமல் தீவிரம் காட்டி வருகிறார்.

    திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிவடைந்து, படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தள்ளிப்போனது. இதற்கிடையே இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனை மறுத்த படக்குழுவினர், இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 18-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளனர். 



    படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் சில வாரங்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றவேண்டாம் என்றும், கதைக்கு என்ன தேவையோ அது இருந்தால் போதும் என்றும் அவர் பெருந்தன்மையுடன் சொன்னதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார்.

    இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர்.

    அதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் வயதானவராகவும், இளைஞராகவும் 2 வேடங்களில் வருகிறார். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை சிம்பு எடுக்க இருக்கிறார். #STRinMaanaadu #VP9
    சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மகத், கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி பூஜையுடன் படம் தொடங்கப்பட உள்ளது.



    ‘மாநாடு’ கதையைக் கேட்டுவிட்டு, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார் சிம்பு. உடலைக் குறைத்து, தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாடு செல்ல உள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி பட பூஜைக்குத்தான் சிம்பு சென்னை திரும்புவார் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

    சிம்புவுடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. #STR #STRinMaanaadu #VP9
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `மாநாடு' படத்திற்காக மங்காத்தா கூட்டணி இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9
    சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி  துவங்கவிருக்கிறது. இதற்கிடையே படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.



    மேலும் அர்ஜூன் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அர்ஜூன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அர்ஜூன் இணையும் பட்சத்தில் மங்காத்தா கூட்டணி இணைவது உறுதியாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STRinMaanaadu #VP9 #STR #Maanadu #Arjun

    அனிதா உதுப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90 எம்.எல் படத்திற்கு சிம்பு இசையமைக்கும் நிலையில், அந்த படத்தில் இருந்து சிங்கிள் ஒன்றை படக்குழு புத்தாண்டு விருந்தாக வெளியிடுகிறது. #STR #Oviya #90ML
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா `காஞ்னா-3', `களவாணி-2', `90 எம்.எல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `90 எம்.எல்' படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். சிம்பு இசையமைக்கிறார். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது. `பீர் பிரியாணி' என தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. #STR #Oviya #90ML #BeerBiryani

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி, சிம்பு ரசிகர்களுக்கு மாநாடு சிறப்பு விருந்தாக இருக்கும், அடுத்த வருடம் நம்முடையது என்று குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9
    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி  துவங்கவிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் முழு கதையையும் தயார் செய்துவிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு அதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூறியுள்ளார்.


    கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு செமயான விருந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

    மாநாடு படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்துரைத்தார். கதை கேட்க ரோலர் கோஸ்டர் போல் இருந்தது. ஏற்ற இறக்கமான திரைக்கதை. கண்டிப்பாக சிம்பு ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு விருந்தாக அமையும். அதுமட்டுமின்றி சிம்புவின் திரைப்பயணத்தில் மாநாடு ஒரு முக்கிய படமாக இருக்கும். அடுத்த வருடம் நம்முடையது தான். புத்தாண்டு வாழ்த்துக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9 #STR #Maanadu

    வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு படங்களை முடித்த பிறகு சிம்பு அடுத்ததாக சீமான் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR #Seeman
    செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

    இந்த படத்தை முடித்தபிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்கவிருக்கிறது. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார்.



    இந்த நிலையில், சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதய சூழலுக்கு ஏற்ப அந்த படம் உருவாகுவதாகவும், இதில் சிம்பு மருத்துவராக நடிப்பதாகவும் கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. #STR #Seeman

    ×