என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Strike Rate"
- ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி 661 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விவாத நிகழ்ச்சியில் நேற்று (மே 17) பங்கேற்ற சுனில் கவாஸ்கர் மற்றொரு கருத்தை கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி 661 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இருப்பினும் ஆராம்ப போட்டிகளில் தனது சொந்த சாதனைகளை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்திய கோலி சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதே பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைய காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஹைதராபாத்துக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் 15 ஓவர்கள் வரை விளையாடிவிட்டு கடைசியில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் என்று முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த விராட் கோலி , நான் அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறேன். மற்ற யாருக்காகவும் விளையாடவில்லை என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நேற்று (மே 17) பங்கேற்ற சுனில் கவாஸ்கர் மற்றொரு கருத்தை கூறியுள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விராட் கோலி தன்னுடைய கேரியரை துவங்கிய போது அது நிலையான கேரியராக இல்லை. இப்போது நாம் பார்க்கும் விராட் கோலிஇந்த நிலைமைக்கு வர தொடக்க காலகட்டங்களில் கோலியின் ஆட்டத்துக்கு பலம் சேர்த்து அவருக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த எம்எஸ் தோனியே காரணம் என்று தெரிவித்துள்ளார்.