search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students demand"

    • திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள் போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் இருந்து வள்ளியூர் வரை நாலுமூலைக்கிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், நங்கை மொழி, சாத்தான்குளம், இட்டமொழி மற்றும் இதற்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரிக்கு சென்று வருகின்றனர். காலை நேரத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள் போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

    எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் வரை அதே போல் சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூருக்கும் பிரத்தியேகமாக மாணவ- மாணவிகளுக்கென தனியாக மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இதே போல் சாத்தான்குளத்தில் இருந்து வள்ளியூருக்கும், வள்ளியூரிலிருந்து சாத்தான்குளத்திற்கும் தனி பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    திருப்பூர் :

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது. இப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு பதில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றுவது நிறுத்தப்பட்டது. முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது செமஸ்டருக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்படும். ஒப்புதல் கிடைத்தால் அமல்படுத்தப்படும் என்றார்.

    வடபாதிமங்கலம் மற்றும் மன்னார்குடி வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், சேந்தங்குடி, பாலக்குறிச்சி, அரிச்சந்திரபுரம், புனவாசல், பழையனூர், நாகங்குடி, காடுவெட்டி, பண்டுதக்குடி, கொத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

    இவ்வாறு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மாணவர்கள் கூறியதாவது:-  வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக மன்னார்குடி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் குறைவாக தான் இயக்கப்படுகின்றன. ஆதலால் தினமும் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மன்னார்குடி, புள்ளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    இதனால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டும், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டும் செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியுறுகின்றனர்.

    வடபாதிமங்கலம்-மன்னார்குடி வழித்தடத்தில் காலையில் 7 மணியிலிருந்து 9.30 மணி வரை 2 அரசு பஸ்களும், அதேபோல் மாலையில் 4 மணியில் இருந்து 6 மணி வரையிலும் 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×